திமுக அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் செஞ்ச அந்த வேலை. கதிகலகலக்கும் ஸ்டாலின் கூடாரம்.
திமுகவின் தேர்தல் உத்தி ஆலோசகராக இருக்கும் பிரஷாந்த கிஷோருக்கு எதிராக அக்கட்சியில் ஒரு டீம் கொதிப்பில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
திமுகவுக்கு அரசியல் வியூகங்களை வகுத்துவரும் ஐபேக் டீம் மீது, திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவான ஐடி விங்கிற்கு கடும் அதிருப்தி இருப்பதாக தகவல் பரவி இருக்கிறது. இதற்கெல்லாம் பிரஷாந்த் கிஷோர் எடுத்திருக்கும் சில நடவடிக்கைகளே காரணம் என்று தெரிய வந்திருக்கிறது.
திமுக போலவே மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவோடும் இப்போது தேர்தல் வியூகத்துக்கான ஒப்பந்தம் போட்டிருக்கிறார் பிரஷாந்த் கிஷோர். அதே நேரத்தில் அவரது ஐபேக் நிறுவனம் தமிழகத்தில் ஒரு வேலை செய்ய ஆரம்பித்து இருக்கிறது.
அதாவது தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் விரைவில் கள ஆய்வை நடத்துகிறது. அதற்காக, ஆங்காங்கே ஆட்களை நியமிக்கும் நடவடிக்கைகளில் இறங்கி இருப்பதாக தெரிகிறது.
இந்த நடவடிக்கை பற்றியும், என்ன செய்ய போகிறோம் என்பதை பற்றியும் சிறிதளவு கூட தங்களிடம் ஐபேக்கும், பிரஷாந்த் கிஷோரும் கலந்து பேசுவதில்லை என்கிறது திமுக ஐடி விங்.
திமுக ஐடி விங்கை அவர் மதிப்பதே இல்லையாம். மேலும் பீகாரில் கடந்த முறை ஐபேக்கோடு ஒப்பந்தம் போட்டிருந்த ஐக்கிய ஜனதா தளம், இப்போது அதற்குப் பதிலாக வேறொரு நிறுவனத்தோடு ஒப்பந்தம் போட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
கடந்த முறை ஐபேக் டீம்தான், நிதீஷ்குமாரை முதலமைச்சராக்க களத்தில் இறங்கியது. அதை தொடர்ந்து, ஐக்கிய ஜனதாதள துணைத் தலைவராக பிரஷாந்த் கிஷோரை நியமித்தார் நிதிஷ் குமார்.
பின்னர் இருவருக்கும் முட்டிக்கொள்ள கட்சிப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் பிரஷாந்த் கிஷோர். இப்போது, அவர், ஐபேக் போலவே அரசியல் வியூகத்தில் புகழ்பெற்ற ஜேபிஜி நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்தார்.
இதை நிர்வகிப்பது ஜான் ஆரோக்கிய சாமி என்பவரும், கிரீஸ் தாக்கே என்பவரும் என்று கூறப்படுகிறது. இந்த நிறுவனம் ஏற்கனவே சித்தராமையா, உத்தவ் தாக்கரே, சரத்பவார், அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்காக களமிறங்கிய நிறுவனம் என்று சொல்லப்படுகிறது.
தொடரும் தான் தோன்றித்தனமாக நடவடிக்கைகள், செயல்பாடுகள் என ஐபேக், பிரஷாந்த் கிஷோரின் ஆக்ஷனால் கடுப்பில் உள்ளனராம் திமுக நிர்வாகிகள். கட்சியின் தலைமை அலுவலகத்திலும் யாரையும் கண்டு கொள்வது இல்லை. இவரை நம்பி கட்சி வெற்றியை ஒப்படைத்திருக்கிறாரே என்று புலம்பி தள்ளுகின்றனர் திமுகவின் சீனியர்கள். எது எப்படியோ வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வர் ஆகவேண்டும் என்பது திமுக நிர்வாகிகள் மற்றும் கட்சியின் கடைசி தொண்டர்களின் கனவு நிறைவேறுமா...
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்திகள்- கோவி.சரவணன்...