மக்கள் நீதி மையம் சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சேலம் மாவட்டத்தில் நடைபெற்றது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் செயலாற்றும் பணிகள் குறித்து சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பொதுச்செயலாளர் ஏ. ஜி.மௌரியா ஐபிஎஸ் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் ராஜசேகர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் சேலம் மாவட்ட செயலாளர் பிரபு மணிகண்டன், மணிவண்ணன் உள்ளிட்டு நாமக்கல் தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் நீதி மைய செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...