திருப்பத்தூரில் 63 ஆந்திரா மாநில கூலி தொழிலாளர்களுக்கு உணவு பொருட்கள் மற்றும் பழங்கள், முக கவசங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். விஜயகுமார் வழங்கினார்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர்- திருவண்ணாமலை சாலையில் உள்ள தேங்காய் மண்டியில் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த 63 கூலி தொழிலாளர்கள் அங்கு பணியாற்றிய வருகின்றனர். தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக அனைத்து மாநில எல்லைகள் மற்றும் மாவட்ட எல்லைகள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் தாங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் பணி புரியும் இடத்திலேயே 63 கூலித்தொழிலாளிகள் தங்கி உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் அங்குள்ள கூலித்தொழிலாளிகளிடம் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசினார். அதன்பின் காவல் துறை சார்பில் 63 கூலித்தொழிலாளிகளுக்கு அரிசி மூட்டைகள் மற்றும் பழங்கள், மூக கவசங்கள், வழங்கி கை கழுவும் பழக்கத்தினால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதன்பின் புதுப்பேட்டை சாலையில் உள்ள மகாத்மா காந்தி முதியோர் இல்லத்தில் உள்ள 10 மேற்பட்ட முதியோர்களுக்கு அரசி, பருப்பு, பழங்கள் ஆகிய உணவு பொருட்கள் மற்றும் முக கவசங்களை வழங்கினார். உடன் திருப்பத்தூர் துனை காவல் கண்காணிப்பாளர் தங்கவேல் , எஸ்பி இன்ஸ்பெக்டர் பழனி, காவல் ஆய்வாளர்கள் பேபி, மதனலோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்...
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்திகள்- கோவி. சரவணன்