திருவாரூர் அருகே விவசாயிகளுடன் உரையாடி வயலில் இறங்கி நாற்று நட்ட தமிழக முதல்வர்...


திருவாரூர் அருகே  விவசாயிகளுடன் உரையாடி வயலில் இறங்கி நாற்று நட்ட தமிழக முதல்வர்...


திருவாரூர் மாவட்டத்தில் தன்னை வரவேற்ற விவசாயிகளுடன் முதலமைச்சரும் வயலில் இறங்கி நடவு நட்டார்.


காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கு திருவாரூரில் இன்று பாராட்டு விழா நடைபெறுகிறது.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் கோயில்வெண்ணியை அடுத்த சித்தமல்லி என்ற இடத்தில், விவசாயிகளுடன் உரையாடியபடியே முதலமைச்சர் வயலில் இறங்கி சென்றார். அப்போது கோடை சாகுபடிக்கான நடவுப் பணி நடைப்பெற்றது. அப்போது  முதலமைச்சரும் விவசாயிகளுடன் சேர்ந்து நடவு நட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அடிக்கடி தமிழக முதல்வர் நானும் ஒரு விவசாயி என கூறி வருகிறார் என திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த வாரம் நக்கல் நையாண்டி செய்து இருந்தார். அப்போது தமிழக முதல்வர் ஒரு விவசாயியின் அருமை இன்னொரு விவசாயிக்கு தான் தெரியும் என பதில் அடி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image