கொரோனா வைரஸ் கேரளா மற்றும் புதுச்சேரியில் 5 பேருக்கு அறிகுறி..
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், கேரளாவில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ், இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இங்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பியவர்களை அந்தந்த விமான நிலையங்களில் வைத்தே தீவிர பரிசோதனை செய்கின்றனர். அதோடு, கொரோனா வைரஸ் தொற்று இருக்கும் என சந்தேகிக்கப்படும் நபர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்திருந்தது. அதிகபட்சமாக, கேரளாவில் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, மகாராஷ்டிராவில் 11 பேரும், உத்தரபிரதேசத்தில் 10 பேரும், டெல்லியில் 6 பேரும், கர்நாடகாவில் 4 பேரும், லடாக்கில் 3 பேரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தெலுங்கானா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் ஜம்மு – காஷ்மீரில் தலா ஒருவர் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்த நிலையில், கேரளாவில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. திருச்சூர் மற்றும் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் பாதிக்கப்பட்டுள்ளதை அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் உறுதிபடுத்தியுள்ளார். இதன்மூலம், இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது.
இதேபோல, , கொரோனா வைரஸ் தாக்குதலுக்குள்ளான மாநிலங்களில் புதுச்சேரியும் இடம்பிடித்துள்ளது. கொரோனா வைரஸ் அறிகுறி தென்பட்ட 3 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, புனே ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 3 நாட்களுக்கு பிறகு வரும் ஆய்வு முடிவுகளை வைத்தே, அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா..? என்பது உறுதி செய்யப்படும்.
அடுத்தடுத்து இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது...
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்திகள்- கோவி.சரவணன்...