திருப்பத்தூர் அருகே மர்ம விலங்கு கடித்ததில் 4 ஆடுகள் பலி ...
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஊராட்சி ஒன்றியம் சிம்மணபுதூர் ஊராட்சியில் உள்ள புலுகனவலசை பகுதி சேர்ந்தவர் கூலித்தொழிலாளி வெங்கடாசலம் மகன் ராஜா இவருக்கு சொந்தமாக பத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் உள்ளன. இந்நிலையில் நேற்று மாலை அஃதே பகுதியில் உள்ள மாந்தோப்பில் ஆடுகள் மேய்த்துக் கொண்டிருந்தபோது திடீரென மர்ம விலங்குகள் நான்கு ஆடுகளை துரத்தித் துரத்திக் கடித்ததில் நான்கு ஆடுகள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து விஷமங்கலம் கால்நடை துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கால்நடைத்துறை அதிகாரிகள் இறந்த ஆடுகளை பரிசோதனை மேற்கொண்டதில் ஆடுகளை கடித்த மர்மம் விலங்கு செந்நாய் அல்லது தெருநாய்கள் இருக்கலாம் என்ற ரீதியில் விசாரணை மேற்கொண்டனர். கூலி தொழிலாளி நான்கு ஆடுகள் இறந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது...
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..
செய்திகள்- கோவி.சரவணன்....