நெல்லை-தென்காசி மாவட்டங்களில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3753 பள்ளிகள், 82 கல்லூரிகள் மூடப்பட்டது.

 


நெல்லை-தென்காசி மாவட்டங்களில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3753 பள்ளிகள், 82 கல்லூரிகள் மூடப்பட்டது.


நெல்லை:


நெல்லை- தென்காசி மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தீவிர முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்ட எல்லைகளில் வெளியில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணி தொடர்ந்து இரவு- பகலாக நடந்து வருகிறது.


இதுபோல அனைத்து ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், மார்க்கெட்டுகள், மக்கள் கூடும் இடங்கள் ஆகியவற்றில் தீவிர கண்காணிப்பில் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.


நேற்று நெல்லை- தென்காசி மாவட்டங்களில் உள்ள 2916 தொடக்க பள்ளிகள் மற்றும் நர்சரி பள்ளிகள் மட்டும் மூடப்பட்டிருந்தது. இன்று அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. அரசு தேர்வு நடக்கும் பள்ளி, கல்லூரிகள் மட்டும் திறக்கப்பட்டு தேர்வுகள் நடந்து வருகிறது.


இன்று நெல்லை- தென்காசி மாவட்டங்களில் உள்ள 419 நடுநிலைப்பள்ளி கள், 418 மேல்நிலைப்பள்ளிகள், 82 கல்லூரிகள் ஆகிய அனைத்தும் மூடப்பட்டன. ஆனால் அங்கு வழக்கம் போல் ஆசிரியர்கள் பணிக்கு வந்தனர். பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுகளும் வழக்கம் போல் நடைபெறுகிறது.


நெல்லை-தென்காசி மாவட்டங்களில் உள்ள அனைத்து சினிமா தியேட்டர்களும் நேற்று முதல் மூடப்பட்டது. இன்று 2-வது நாளாக தியேட்டர்கள் மூடப்பட்டன. இது போல் நெல்லை – தென்காசி மாவட்டங்களில் உள்ள 140-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் பார்களும் மூடப்பட்டன. ஆனால் டாஸ்மாக் மதுபானக்கடை வழக்கம் போல் திறந்து விற்பனை நடந்து வருகிறது.


இதுபோல விளையாட்டு மைதானம், பொதுமக்கள் மொத்தமாக நடை பயிற்சி செல்லும் இடங்களிலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் அங்கு பயிற்சி செல்லும் விளையாட்டு வீரர்கள் செல்லவில்லை.


கோவில்களில் பக்தர்கள் மொத்தமாக சென்று சாமி தரிசனம் செய்ய கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தனித்தனியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.


இதனால் நெல்லையப்பர் கோவில், தென்காசி காசி விசுவநாதர் கோவில், பாபநாசம் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் கூட்டம் மிகவும் குறைந்தது. பக்தர்கள் இல்லாமல் கோவில் நடைகள் வெறிச்சோடியது.


பாபநாசம் படித்துறையில் பொதுமக்கள் மொத்தமாக குளிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் இன்று படித்துறையில் குளிப்பவர்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடியது. குற்றால அருவிகளிலும், மணிமுத்தாறு அகஸ்தியர் அருவிகளிலும் குளிக்க பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.


நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் பார்வையாளர்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.


இதுபோல சிறை கைதிகளை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாளை மத்திய சிறையில் இன்று கைதிகளை பார்க்க யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. கொரோனா வைரஸ் அபாயம் குறைந்த பிறகு மறு அறிவிப்பு வந்த பிறகு கைதிகளை பார்க்க வருமாறு உறவினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


திருமண மண்டபங்களுக்கும் திருமணம் மற்றும் விசே‌ஷ நிகழ்ச்சிகள் நடத்த கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


இந்த கட்டுப்பாடுகளால் நெல்லை- தென்காசி மாவட்டங்களில் உள்ள அனைத்து பஸ் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் குறைந்தது. நெல்லை புது பஸ் நிலையத்தில் பிளாட்பாரங்களில் குறைந்த பயணிகளே இருந்தனர். தென்காசி புது பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. பள்ளி மாணவ- மாணவிகள் இன்று பள்ளிக்கு வராததால் பாளை பஸ் நிலையம் மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.


ரோந்து போலீசார், மக்களிடம் நேரிடையாக பழகும் அரசு ஊழியர்கள், ஆஸ்பத்திரி ஊழியர்கள் அனைவரும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக முக கவசம் அணிந்து பணியாற்றினர்.


பொதுமக்களில் பலரும் இன்று முககவசம் அணிந்து வெளியில் சென்று வந்தனர். சூப்பர் மார்க்கெட் மற்றும் பெரிய வியாபார நிறுவனங்களிலும் இன்று ஊழியர்கள் முக கவசம் அணிந்து பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...


 


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image