தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் உள்ள மழலையர் பள்ளிகளுக்கு வரும் 31ம் தேதி வரை விடுமுறை... பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு...

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் உள்ள மழலையர் பள்ளிகளுக்கு வரும் 31ம் தேதி வரை விடுமுறை... பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு...


சீனாவில் தோன்றி கொரோனா வைரஸ் இப்போது உலக நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட நாடுகளை பதம் பார்த்து வருகிறது.


இந்த வைரசால், 4000 பேர் பலியாகி உள்ளனர். பல்லாயிரக் கணக்கானோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் 70க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் 76 வயது முதியவர் கொரோனாவால் உயிரிழந்து இருக்கிறார். இது தான் இந்தியாவில் கொரோனாவின் முதல் பலியாகும்.


நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தீவிர தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 11 மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


உத்தரபிரதேசம், சத்தீஸ்கர், டெல்லி, ஒடிசா, உத்தரகாண்ட், மணிப்பூர், அரியானா, பீகார் மற்றும் ஜம்மு உள்ளிட்ட மாநிலங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


பீகாரில் சினிமா திரையரங்குகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பூங்காக்களும் வரும் 31-ம் தேதி வரை மூடப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.


தமிழகத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று பல தரப்பிலும் இருந்து கோரிக்கைகள் எழுந்தன. இதுகுறித்து தமிழக அரசு விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டது.


அதனையடுத்து தற்போது கேரளாவை ஒட்டியுள்ள கோவை, திருப்பூர், நீலகிரி, நெல்லை, தென்காசி, தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 5ம் வகுப்பு வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


அதே போன்று தமிழகம் முழுவதும் உள்ள எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகளுக்கு வரும் 16ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது...


இது போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...


செய்தி- கோவி.சரவணன்...


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image