வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..
அமெரிக்காவில் சிறிய அளவிலான அணு உலை விபத்து நிகழ்ந்தது 1979 மார்ச் 28 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு, அமெரிக்கா பென்சில்வேனியா, டாபின் கவுண்டியில் உள்ள மூன்று மைல் தீவிலுள்ள அணுசக்தி உற்பத்தி நிலையத்தின் 2 வது அணு உலை விபத்துக்குள்ளான தினம் இன்று.
விபத்து நேர்ந்து இரண்டு நாட்களில் NRC [Nuclear Regulatory Commission] TMI-2 அணு உலைக்கு 5 மைல் வட்டாரத்தில் வாழும் கர்ப்பவதிகளையும், சிசுக்களையும் வீடுகளை விட்டு வேறு இடங்களுக்குப் புகும்படி, பென்ஸில்வேனியா ஆளுநர் [Governor] மூல மாக ஆணை பிறப்பித்தது!
ஐந்து மைல் சுற்றளவில் குடியிருந்த 60% நபர்கள், 15 மைல் வட்டாரத்தில் வாழ்ந்த 39% மக்கள் ஆணைக்குக் கீழ்படிந்து வெளியேறினர்!
பிறகு அபாய வேளை கடந்ததும் ஏப்ரல் 2 ஆம் தேதி அனைவரும் தம் வீடுகளுக்கு மீள அழைக்கப் பட்டனர்!
திரிமைல் தீவு (TMI-2) அணுமின் நிலைய விபத்து, உலகில் வாணிப அணுமின் சக்தி வளர்ச்சியின் வரலாற்றையே முற்றிலும் மாற்றி விட்டது!
திரி மைல் தீவு விபத்தில் யாரும் மரணம் அடைய வில்லை!
எவரும் பேரளவுக் கதிரடி பட்டுத் துன்புற வில்லை!
திரி மைல் தீவு விபத்தில், கதிர்வீச்சால் அவ்விதம் நீண்ட கால விளைவுகள் எதுவும் நிகழ வில்லை!
ஆனால் அமெரிக்காவில் அடுத்துக் கட்டப் போகும் புதிய அணுமின் நிலையங்கள் நிறுத்தப்பட்டன.
*கட்டப் பட்டுவரும் அணுமின் உலைகளும், இயங்கி வரும் அணுமின் உலைகளும் மென்மேலும் ஆராயப் பட்டு மேம்படுத்தப் பட்டன !*
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...