டில்லியில் நடந்த தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற, தமிழகத்தைச் சேர்ந்த 1500 பேரில், 16 பேருக்கு, 'கொரோனா' வைரஸ்...


டில்லியில் நடந்த தப்லீக் ஜமாஅத்  மாநாட்டில் பங்கேற்ற, தமிழகத்தைச் சேர்ந்த 1500 பேரில், 16 பேருக்கு, 'கொரோனா' வைரஸ்...



இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் திடீரென கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. அதற்கு, டில்லியில் நடந்த இஸ்லாமிய மாநாட்டுக்கு சென்று வந்தவர்களும் காரணமாக இருப்பது தெரிய வந்துள்ளது.


'தப்லீக் ஜமாத்' என்ற, இஸ்லாமிய பிரசார குழு சார்பில், டில்லியில், மார்ச், 21 முதல் மூன்று நாட்கள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில், தமிழகத்தை சேர்ந்த, 1,500 பேரும் பங்கேற்றனர். அவர்கள் ஊரடங்கு அமலாவதற்கு முன்தினம், சென்னைக்கு ரயிலிலும், விமானத்திலும் வந்துள்ளனர்.


பின், தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதே மாநாட்டில் பங்கேற்ற சிலர், அந்தமானை சேர்ந்தவர்கள். அவர்கள் அந்தமானுக்கு விமானத்தில் சென்று, அங்கு தனிமை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, கொரோனா வைரஸ் பாதித்திருப்பது உறுதியானது.


அவர்களிடம் நடத்திய விசாரணையில், டில்லி மாநாட்டில், பங்கேற்றதை உறுதி செய்துள்ளனர். மேலும், ஈரோட்டுக்கு வந்த தாய்லாந்து குழுவினர், ஏற்கனவே டில்லிக்கு போய் வந்தது தெரியவந்துள்ளது. ஈரோட்டில் புதிதாக நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் சிலர், டில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள்.


மொத்தத்தில், டில்லி மாநாட்டில் பங்கேற்ற, தமிழகத்தைச் சேர்ந்த, 1,500 பேரில், 16 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்திருப்பது உறுதியாகி உள்ளது. அதனால், மாநாட்டில் பங்கேற்க டில்லி சென்று வந்த அனைவரும், அவர்களது குடும்பத்தினரும், அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பதிவு செய்து, தங்களை சுய தனிமைப்படுத்திக் கொள்ளும்படி, அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


மேலும், இஸ்லாமிய மாநாட்டிற்காக, டில்லி சென்று வந்தவர்களில், 981 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.


மாநாட்டில் பங்கேற்றவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் யாராவது, தாமாகவே முன்வந்து, சுகாதாரத் துறையிடம் பதிவு செய்து, தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை எனில், அவர்களைப் பற்றிய விபரம் அறிந்த மற்றவர்கள், அரசுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும் தமிழக அதிகாரிகள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எது எப்படியோ இந்த கொரோனா வைரஸ் அதிகளவில் பரவாமல் பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனின் தற்போதைய கடமை எனவே தயவு செய்து யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என "தமிழ் சுடர் காலை நாளிதழ்" நிர்வாகம் சார்பில் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...


தமிழ் சுடர் ஆன்லைனில்....


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image