திருப்பத்தூர் அடுத்த சிம்மணபுதூர் கிராமத்தில் 15 ஆம் ஆண்டு மாசி திருவிழா பக்தர்கள் சாமி தரிசனம்...

திருப்பத்தூர் அடுத்த சிம்மணபுதூர் கிராமத்தில் 15 ஆம் ஆண்டு மாசி திருவிழா பக்தர்கள் சாமி தரிசனம்...


திருப்பத்தூர் மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியில் இயற்கை எழில் கொஞ்சும் ஜவ்வாது மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஊர் சிம்மணபுதூர் ஊராட்சி ஆகும். இந்த சென்னகிருஷ்ணனூர் கிராமத்தில் மிகவும் பிரபலமான
ஸ்ரீ  அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் வெகு சிறப்பாக மாசி திருவிழா ஆலய நிர்வாக இயக்குனர் ஸ்ரீ ஸ்ரீ சுந்தரவடிவேல் சாமிகள் தலைமையில்  நடைபெற்றது. அந்தவகையில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் 4நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இறுதி நாள் அன்று ஊர்மக்கள் மற்றும் பக்தர்கள் சார்பில் பொங்கல் வைத்து அம்மனுக்கு பால்குடம், தீ செட்டி எடுத்தல், மயிலாட்டம், காவடியாட்டம், போன்ற தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு மூலம் ஊர்வலமாக சென்று சாமி தரிசனம் செய்தனர். இந்த திருவிழாவை காண கர்நாடக மாநிலம் பெங்களூரு, மைசூர், கே.ஜி.எப் ஆந்திரா மாநிலம்   குப்பம், வி.கோடா, மல்லூர்  மற்றும் அண்டை மாவட்டங்களான தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், விழுப்புரம், காஞ்சிபுரம்,போன்ற பகுதிகளில் இருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..


செய்தி- கோவி.சரவணன்...


Popular posts
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image