திருப்பத்தூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு. பாதுகாப்பு பணியில் 1156 காவலர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தகவல்...
தமிழகத்தில் நிலவிவரும் கொரோனா வைரஸ் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக 144 தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சிவனருள் ஆணைப்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். விஜயகுமார் தலைமையில் 1156 போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு உள்ளனர்.மேலும் ஆந்திரா கர்நாடகா மாநில எல்லைகளான கொத்தூர் தகரகுப்பம் பாரதிநகர் மற்றும் கொல்லப்பள்ளி ஆகிய 4 இடங்களில் மாநில சோதனை சாவடிகளும். மாவட்ட எல்லைகளான சின்னகந்திலி, சிம்மணபுதூர், தோரணம்பதி, வெலக்கல்நத்தம் (லட்சுமிபுரம்) மாதனூர், உள்ளிட்ட 8இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து 24மணி நேரமும் காவல்துறை வருவாய்த்துறை மற்றும் மருத்துவ துறையினர் சேர்ந்து பணியாற்றுவர்கள். மேலும் கொரோனா வைரஸ் சம்பந்தமாக மாவட்ட கட்டுப்பாடு அமைத்து பொதுமக்கள் கொரோனா வைரஸ் குறித்து தகவல் அளிக்க மற்றும் ஆலோசனை பெற 04179_221104 என்ற தொலைப்பேசி எண்ணிற்கும் 9442992526 என்ற வாட்ஸ் ஆப் எண்களை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். விஜயகுமார் தெரிவித்துள்ளார்...
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்திகள்- கோவி.சரவணன்...