கொரோனோ வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 1000திற்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக சிக்கன் பிரியாணியுடன் சிக்கன் பக்கோடா வழங்கிய கோழி கறி கடை உரிமையாளர்.
ஆம்பூரில் ருசிகரம்..
உலகமெங்கும் கொரோனோ வைரஸ் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த வைரஸ் குறித்து சிலர் பரப்பும் வதந்திகளால் பலரது வாழ்வாதாரம் பாதிப்படைகிறது இதுபோல
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் உமர் ரோடு பகுதியில் ஆம்பூர் சிக்கன் சென்டர் என்ற பெயரில் கோழிக்கறி கடை நடத்தி வருபவர் உமாசங்கர் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனோ வைரஸ்
சிக்கன் சாப்பிடுவதால் பரவுகிறது என்று சமூக வலைதளங்களில் பரவிய வதந்தியால் இவரது கடையிலும் வியாபாரம் முற்றிலுமாக தோய்வுற்றது இந்நிலையில் வியாபாரத்தை பெருக்கவும் கொறோனோ வைரஸ் சிக்கன் உண்பதால் பரவுவதில்லை என்பதை விழிப்புணர்வு செய்யும் வகையில் சாந்தி சிக்கன் மற்றும் ஆம்பூர் சிக்கன் செனட்டர் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் இலவசமாக சிக்கன் பிரியாணியும் சிக்கன் 65 வழங்கப்படுமென விளம்பரப் படுத்தினார்.
இதையடுத்து இலவசாமாக சிக்கன் பிரியாணி மற்றும் சிக்கன் பக்கோடாவையும் வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் வதந்தியை பொருட்படுத்தாமல் வாங்கி சுவைத்து சென்றனர்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.
செய்திகள்- கோவி.சரவணன்- அரவிந்தன்..