திருப்பத்தூர் அடுத்த செவ்வாத்தூரில் 100 ஆண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ பச்சை பெருமாள் ஆலய மகா கும்பாபிஷேக திருவிழா -திரளான பக்தர்கள் பங்கேற்பு..
திருப்பத்தூர் மாவட்டம் செவ்வாத்தூர் பகுதியில் அமைந்துள்ள 100 ஆண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ பச்சை பெருமாள் ஆலய மஹா கும்பாபிஷேக பெருவிழா கார்த்திக் சுமதி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவிற்கு முன்னாள் தலைவர் மணி மற்றும் பெருமாள் பூசாரி நடராஜ் ஆலய ஒருங்கிணைப்பாளர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக மதுரை ஸ்ரீ மஞ்சள் மழை ஆசுகவி அருட்கவி கவிசிற்பி ஞானகுரு அருட்சித்தர் இ.பூவலிங்கனார் அவர்கள் கலந்து கொண்டார். பால்குடம் எடுத்து வந்து சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பின் புனித நீர் பொதுமக்கள் மீது தெளிக்கப்பட்டது இதில் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கத்துடன் பெருமாளை வழிபட்டனர் பின் அனைவர் மீதும் புனிதநீர் தெளிக்கப்பட்டது. பிறகு 5000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்திகள்- கோவி. சரவணன்...