ஏலகிரி மலை அடிவாரத்தில் மீண்டும் சிறுத்தை புலி நடமாட்டம். இரு ஆடுகள் பலி வனத்துறை அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு..

ஏலகிரி மலை அடிவாரத்தில் மீண்டும் சிறுத்தை புலி நடமாட்டம். இரு ஆடுகள் பலி வனத்துறை அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு..


திருப்பத்தூர் மாவட்டம்  ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்ந்து. இந்த ஏலகிரி மலையில் கரடி, செந்நாய், குரங்குகள் உட்பட ஒருசில வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை அடிவாரத்தில் உள்ள  மண்டல வாடி ஊராட்சி காமராஜபுரம்  பகுதியில்   கடந்த சில வாரங்களுக்கு முன் அடுத்தடுத்த இரண்டு நாட்களில் ஐந்துக்கும் மேற்பட்ட ஆடுகளை  மர்ம விலங்கு தாக்கியதில் பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து திருப்பத்தூர்  வனத்துறையினர்  காமராஜபுரத்தில்   முகாமிட்டு  கண்காணிப்பு கேமராக்களை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டதில்  அது  அப்பகுதியில் உள்ள  மக்கள் வளர்க்கும் நாயை என தெரியவந்தது.இந்த நாய் தான்  ஆடுகளை வேட்டையாடிய தாக  அப்போது வனத்துறை அதிகாரிகள்   வழக்கை முடித்து வைத்தனர். இந்நிலையில் மீண்டும் அஃதே பகுதியில்  மர்ம விலங்கு தாக்கியதில் இரண்டு ஆடுகள் பலியான சம்பவம் மீண்டும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மீண்டும் அஃதே பகுதியில்   ஆடுகளை தாக்கியது எந்த விலங்கு ? என தெரியாமல் மீண்டும் திருப்பத்தூர்  வனத்துறையினரும் விழி பிதுங்கி என்ன செய்வது என்று தெரியாமல் பெரும் குழப்பமடைந்துள்ளனர் . ஆனால் ஆடுகளை வேட்டையாடியது சிறுத்தை தான்  என அப்பகுதி பொதுமக்கள்  தொடர்ந்து கூறினாலும் வனத்துறையினர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்து வருகின்றன. எது எப்படியோ  ஏலகிரி மலை அடிவாரத்தில் மீண்டும் சிறுத்தை புலி நடமாட்டம் என்ற ஒரு பீதியை கிளப்பி  சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பையும் மற்றும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...


செய்திகள்- கோவி. சரவணன்...


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image