திருப்பத்தூரில் விவசாயிடம் பணம் கேட்டு மிரட்டிய நிருபர்கள் போலீஸ் வழக்கு பதிவு.
கைது செய்ய போலீஸ் தயக்கம் காட்டுவது ஏன்.
மாவட்ட எஸ்பி கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் வேண்டுகோள்..
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஊராட்சி ஒன்றியம் கொரட்டி ஊராட்சி செல்லரைபட்டி ஏரியில் ராபின் சிங்,, என்பவர் தன்னுடைய நிலத்திற்கு திருப்பத்தூர் வட்டாட்சியர் அனந்த கிருஷ்ணன் அனுமதியோடு விவசாய நிலத்திற்கு வண்டல்மண் எடுத்துக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது அங்கு சென்ற தொலைக்காட்சி மற்றும் மாலை நாளிதழ் நிருபர் உட்பட 4 பேர் விவசாயி ராபின்சிங் இடம் நீ கள்ளத்தனமாக மண் கடத்துகிறாய் என்று பணம் கேட்டு உள்ளனர் அதற்கு அவர் தான் தாசில்தார் அனுமதியோடு நிலத்திற்காக தான் மண் எடுக்கிறோம் என்று அதற்கான உத்தரவு நகலையும் காட்டியுள்ளனர் அதற்கு அந்த நிருபர்கள் ராபின் சிங்கை மிரட்டி முதல் தவணையாக 8 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு சென்று மீண்டும் மறுநாள் காலையில் ராபின் சிங் இடம் மீண்டும் 5000 ரூபாய் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். இதுகுறித்து ராபின் சிங் கந்திலி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் ஆய்வாளர் உலகநாதன் மாலை நாளிதழ் நிருபர் அமுது ஜீவன், மற்றும் தொலைக்காட்சி நிருபர் ரமேஷ் மற்றும் 2 பேர்கள் மீது மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் சம்பந்தப்பட்ட நபர்களை இதுவரை கைது செய்யாமல் அரசியல் வாதிகளின் அதிகாரத்தில் சுதந்திரமாக சுற்றி வருகின்றனர். ஆனால் இதுவே சாமானியன் மக்களாக இருந்திருந்தால் காவல்துறை இதுபோன்று சுதந்திரமாக நடமாட விட்டிருப்பார்களா. என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி மேலும் குற்றம்சாட்டப்பட்ட நிருபர்கள் இருவரும் அவர்கள் வீடுகளில் உள்ளனர். இவர்களை கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அய்யா அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இவர்களால் பாதிக்கப்பட்டவர்களின் வேண்டுகோள்.
இதேபோல் இந்த கும்பல் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாட்றம்பள்ளி அருகே நாங்கள் அனைவரும் எஸ்பி தனிப்படை போலீசார் என்று மண் கடத்திய கும்பலை மடக்கி 20, ஆயிரம் பேரம் பேசி கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.அதேபோல கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுப்பேட்டை கூட்டுறவு வங்கியில் போலி நகை வைத்தது தொடர்பாக rs.15000 அதன் செயலாளரிடம் பெற்றுச் சென்றுள்ளனர். இவ்வாறு பல்வேறு அடுக்கடுக்கான புகார்கள் இவர்கள் மீது பொதுமக்கள் புகார் தர காத்துக்கொண்டிருக்கின்றனர் ஆனால் வெறுமனே வழக்கு மட்டும் பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்று பொதுமக்கள் போலீசாரை குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே மாவட்ட எஸ்பி விஜயகுமார் உடனடியாக களத்தில் இறங்கி அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பத்தூர் மாவட்ட பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...