திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் தேசிய மாணவர் காவல் படை.


திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் தேசிய மாணவர் காவல் படை.


கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதம் 21 - ந் தேதி மாணவர் காவல் படை ( Student Police Cadet ) ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டமாக இருந்தபோது தமிழக அரசால் உருவாக்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் 66 பள்ளிகள் இணைக்கப்பட்டு அதில் 2904 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு காவலர் வழிகாட்டுதலுக்காக நியமிக்கப்பட்டுள்ளார் . இதுவரையில் 43 பள்ளிகளில்  இருந்து  மாணவர் படையைச் சேர்ந்த  மாணவர்கள் 1892 பேர்  காவல் நிலையங்களை வந்து பார்வையிட்டுள்ளனர்.   அவர்களுக்கு காவல்துறையைப் பற்றியும் , காவல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கம் கொடுக்கப்பட்டது . இதன் மூலம் மாணவர்கள் அவர்களது ஆலுமை திறன்,   தேசபக்தி மற்றும் சேவையின் மதிப்புகளை ஊக்குவித்தல், காவல்  படைகளின் செயல்பாட்டை மதிப்பிடுவதற்கும் இந்த திட்டம் அவர்களுக்கு பெரிதும்  பங்களிக்கும் . மேலும் சமூகத்திற்கான மாணவர்களின் அர்ப்பணிப்பு மற்றும்  சேவைகளுக்காக இது உதவும் . இந்த திட்டம் பள்ளி  மாணவர்களுக்கு  வெற்றிகரமான வாழ்க்கை  மற்றும் பொறுப்புள்ள குடிமக்களாக வளர செய்யும்.   திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற  முதல் குடியரசு தின விழாவில்  மாணவர் காவல் படையை சேர்ந்த மாணவர்கள் மற்றும் இதர பள்ளி மாணவர்கள் என  200 - க்கும் மேற்பட்டவர்கள் விழாவில் பங்கேற்றனர். குறிப்பாக மாணவர் காவல் படையை சேர்ந்த மாணவர்களுக்கு  உள்ளரங்க பயிற்சியில் ஒழுக்கம் , மரியாதை , சகிப்புத்தன்மை , மதிப்புகள் மற்றும் நெறிமுறைகள் பற்றிய  பயிற்சி அளிக்கப்பட்டது.  அதன்பின்  வெளியரங்க பயிற்சியில் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வீதிகள்  குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.  சமூக காவல் மற்றும் குற்ற தடுப்பு காவல் பற்றியும் , நீர்வாகத்துறை நடுவர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக செயல்பாடுகள் குறித்தும் விரிவாக மாணவர்களுக்கு  விளக்கப்படுகிறது . இதன் தொடர்ச்சியாக திருப்பத்தூர் மாவட்ட காவல் துறை முயற்சியின் பேரில் 14 இதர பள்ளிகளில் இருந்தும் , 13 கல்லூரிகளில் இருந்தும் மாணவர்கள் காவல் நிலையங்களை பார்வையிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள். 


செய்தி- சிறப்பு செய்தியாளர்  கோவி. சரவணன்...


Popular posts
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image