புதுக்கோட்டை அருகே உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீடீரென ஆய்வு.
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் வட்டாரம் திருக்கட்டளை என்ற பகுதியில் சண்முகநாதன் அக்வா பார்ம்ஸ் என்ற நிறுவனம் உணவு பாதுகாப்பு துறையில் உரிய உரிமம் இல்லாததாலும், அங்கு தயாரித்து வைக்கப்பட்டிருந்த 7160 தண்ணீர் பாட்டில்களில் மற்றும் 45 எண்ணிக்கையிலான 20 லிட்டர் கேன்களிலும் தயாரிப்பு தேதி மற்றும் அதன் காலாவதி தேதி குறிப்பிடப்படாமல் விற்பனை செய்யப்படுகிறது என சமூக ஆர்வலர்கள் மூலம் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மேற்படி குடிநீர் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அதிகாரிகள் உணவு பாதுகாப்பு துறையிடம் உரிய உரிமம் பெற்ற பின்னரே மீண்டும் உற்பத்தி செய்ய வேண்டும் இல்லையெனில் நிறுவனத்திற்கு சீல் வைக்கபடும் என்றும்
மேலும் அடைக்கபட்ட குடிநீர் தயாரிப்பாளர்கள் உணவு பாதுகாப்பு துறை உரிமம் மற்றும் BIS சான்றிதழ் இல்லாமல் குடிநீர் தயாரிக்கவோ அல்லது விற்பனை செய்யவோ கூடாது என்று உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தெரிவித்தார். புதுக்கோட்டை பகுதியில் உரிய அனுமதியின்றி தண்ணீர் கேன் வினியோகம் செய்யபட்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.