யாராலும் செய்ய  முடியாது என சொன்னவர்களிடம் முடியும் என்று செய்து  காட்டியவர் தமிழக  முதல்வர் என  வருவாய்த்துறை அமைச்சர்  உதயகுமார்..

யாராலும் செய்ய  முடியாது என சொன்னவர்களிடம் முடியும் என்று செய்து  காட்டியவர் தமிழக  முதல்வர் என  வருவாய்த்துறை அமைச்சர்  உதயகுமார்..


தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுக  அரசு மூன்று ஆண்டுகளைக் கடந்து தற்போது  நான்காவது ஆண்டில்  அடியெடுத்து வைத்துள்ளது.
இதையடுத்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனையடுத்து  அதிமுக, நிர்வாகிகளுக்கு மற்றும் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி இந்த நான்காம் ஆண்டு கொண்டாட்டத்தை   கொண்டாடி வருகின்றனர்.


இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,


முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா அவர்கள் மறைந்த பின்னர் ஆட்சியை யாராலும் தொடர முடியாது என்று கூறியவர்கள் முன்னிலையில், முடியும் என்று முடித்துக்காட்டியவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஜெயலலிதா அவர்களின் ஆட்சி திறமை மற்றும் ஆளுமை திறன் அப்படியே முதல்வர் தொடர்ந்து வருகிறார். அதனால் தான் இது அம்மாவின் அரசு என்று நாங்கள் அடிக்கடி கூறி வருகிறோம்.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டம் குறிப்பாக 'சி.ஏ.ஏவை பற்றி  முழுமையாக  தெரியாதவர்கள்தான் அதற்கு எதிராக போராடுகிறார்கள். சி.ஏ.ஏ. பற்றி தெரிந்தவர்கள் அமைதியாக இருக்கின்றனர் என்று தெரிவித்தார். தமிழகம் எப்போதும் அமைதி பூங்காவாக திகழும். எதிர் கட்சிகள் பொதுமக்களை திசை திருப்ப முயற்சி செய்கின்றன. அது ஒருபோதும் நடக்காது. இது அம்மாவின் அரசு மக்களுக்கான அரசு என கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..


http. tamilsudarr.page


செய்தி- சிறப்பு செய்தியாளர்...


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image