முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை
பால்வளத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் தமிழக முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக பால்வளத்துறை அமைச்சரும் மாவட்ட செயலாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்தார்.
விழாவில் அமைச்சர் பேசுகையில்.
அதிமுக கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அவர்கள் 14.05.2013 அன்று சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டுப் போட்டிகளை தேசிய விளையாட்டுப் போட்டிகள் போல் நடத்திட ஆணை பிறப்பித்தார். அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவிலான போட்டிகள் சிறப்பாக நடைபெறுகின்றன. விருதுநகர் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் 15.02.2020 மற்றும் 16.02.2020 ஆகிய இரு தினங்களில் நடைபெற உள்ளது. 15.02.2020 அன்று விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் ஆண் மற்றும் பெண்களுக்கான தடகள போட்டி, ஜூடோ, குத்துச்சண்டை, இறகுபந்து, கபாடி, டென்னீஸ் மற்றும் கைப்பந்து போட்டிகளும் மற்றும் மதுரை ரோடு கே.வி.எஸ்.மேல்நிலை பள்ளியில் ஆண் மற்றும் பெண்களுக்கான கூடைபந்து மற்றும் வளைகோல்பந்து போட்டிகளும், 16.02.2020 அன்று விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் ஆண் மற்றும் பெண்களுக்கான நீச்சல் போட்டியும் நடைபெறவுள்ளது. மாவட்ட அளவிலான இப்போட்டிகளில் முதல் பரிசாக தலா ரூ.1000-ம், இரண்டாம் பரிசாக தலா ரூ.750ம், மூன்றாம் பரிசாக தலா ரூ.500-ம் வழங்கப்படவுள்ளது. மாவட்ட அளவில் தனிநபர் போட்டியில் முதலிடம் பெற்றவர்களும், குழு போட்டியில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களும் மாநில அளவிலான போட்டியில் விருதுநகர் மாவட்டத்தின் சார்பாக கலந்து கொள்வார்கள். மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு முதல் பரிசாக தலா ரூ.1.லட்சமும், இரண்டாம் பரிசாக தலா ரூ.75,000-ம் மூன்றாம் பரிசாக தலா ரூ.50,000- ம் வழங்கப்பட உள்ளது. எனவே, இளைஞர்கள் இது போன்ற போட்டிகளில் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு ஒவ்வொரு இளைஞர்களும் தங்களது தனித்திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும் என பேசினார்.
இவ்விழாவில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தபெருமாள்,மாவட்ட வருவாய் அலுவலர் தஉதயகுமார், திட்ட இயக்குநர்(மா.ஊ.வ.மு) சுரேஷ், மாவட்ட ஊராட்சி தலைவர் வசந்தி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சுபாஷினி, விருதுநகர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சுமதி, கூரைக்குண்டு ஊராட்சி மன்றத் தலைவர் செல்வி, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா மற்றும் அரசு அலுவலகங்கள்,பள்ளி மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.
தமிழ் சுடர் ஆன்லைனில்...