ஆம் ஆத்மி எம்எல்ஏ மீது துப்பாக்கிச்சூடு ஒருவர்பலி.  வெற்றி கொண்டாட்டம் ஓய்வதற்குள் டெல்லியில் பரபரப்பு.


ஆம் ஆத்மி எம்எல்ஏ மீது துப்பாக்கிச்சூடு ஒருவர்பலி.  வெற்றி கொண்டாட்டம் ஓய்வதற்குள் டெல்லியில் பரபரப்பு..



டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. நரேஷ் யாதவின் பாதுகாப்பு வாகனம் மீது நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி சட்டசபை தேர்தலில், நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தேர்தல் முடிவில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 62  தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியினர் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்கள் முடிவதற்கு, அக்கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு முயற்சி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லி மெஹ்ராலி தொகுதியில் இருந்து புதிய எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுரேஷ் யாதவ்,  தனது ஆதரவாளர்களுடன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு நேற்றிரவு வீடு திரும்பி கொண்டு இருந்தார். அவரது வாகனம் டெல்லி கிஷன்கார் பகுதியில் வந்தபோது, மர்ம நபர்கள் சிலர் அவருடைய பாதுகாப்பு வாகனம் மீது பல முறை துப்பாக்கிகளால் சுட்டுள்ளனர். இதில் அவருக்கு பாதிப்பில்லை; காயமின்றி உயிர் தப்பினார். எனினும், அவருடன் வந்த கட்சி தொண்டர் அசோக் மன் என்பவர் துப்பாக்கிச்சூட்டில் பலியானார். மற்றொருவர் காயமடைந்தார்.இந்த  பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்று டில்லி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவின் தலைநகரில் இந்தத் துப்பாக்கி சூடு சம்பவத்தால் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.


செய்திகள்- சிறப்பு செய்தியாளர்...


Popular posts
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image