வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே.. சலங்கை ஒலி இயக்குனர் பிறந்த தினம் இன்று..
தமிழ் மற்றும் தெலுங்கு, கர்நாடகம் என நூறு திரைப்படங்களை எடுத்துக்கொண்டால், அந்தப் படங்களின் பட்டியலில் இவரின் படங்கள் பல வரிசை கட்டி நிற்கும்.
சிறந்த டைரக்டர்கள் எனப் பட்டியலிட்டுப் பார்த்தால், அந்த டாப் டென்னில், இவரின் பெயரும் முக்கிய இடம் பிடிக்கும். அந்தப் படங்களுக்குச் சொந்தக்கார இயக்குநர்...
கே.விஸ்வநாத்.தெலுங்கில் எடுக்கப்பட்ட சங்கராபரணம், தமிழகத்தின் தியேட்டர்களிலும் தெலுங்கு பேசியே வெளியானது. நூறு, இருநூறு நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது. ‘சலங்கை ஒலி’ இயக்குநர் கே.விஸ்வநாத்துக்கு பிறந்த தினம் இன்று அவர் இன்னும் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் திகழவும் அவரின் புகழ் நிலைக்கவும் வாழ்த்துவோம்.
சினிமா சுடர் மற்றும் வரலாற்று சுடர் குழு...