திருச்சி- அபுதாபி- தோகாவுக்கும் நேரடி விமான சேவை - ஏர் இந்தியா அறிவிப்பு.

திருச்சி- அபுதாபி- தோகாவுக்கும் நேரடி விமான சேவை - ஏர் இந்தியா அறிவிப்பு.


திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி சியாம்சுந்தர்  கூறுகையில்.


நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் கடந்த ஆண்டை விட 40 சதவீதம் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. இந்த காலக்கட்டத்திலும் 3 ஆயிரத்து 124.34 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் ஈட்டப்பட்ட மொத்த  வருவாயில் 75% ஆகும்.
அதேபோல் ஏர் இந்தியாவின் நிகர வருவாய் 26 சதவீதம் அதிகரித்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் 679.8 கோடி ரூபாயை வருவாயாக ஈட்டப்பட்டுள்ளது.
  கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 177.3 கோடி ரூபாய் மட்டுமே வருவாய் ஈட்டப்பட்டது. ஏர் இந்தியா நிறுவனத்தின் வருவாய் ரீதியிலான செயல்பாடு சிறந்த முறையில் உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் வரை ஏர் இந்தியாவின் வருமானம் 4,235 கோடி ரூபாயாக இருந்தது. நடப்பு நிதி ஆண்டின்  வருவாய் அளவு 5,000 கோடி ரூபாயை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவன வரலாற்றிலேயே இத்தகைய வருவாய் ஈட்ட போவது இதுதான் முதல் முறை. 2018- 19 ஆம் நிதியாண்டில் 4,171.5 கோடி ரூபாய் மொத்த வருவாய் ஆகும்.  இதில் லாபம் மட்டும் 168.5 கோடியாகும். ஏர் இந்தியாவை பொறுத்தவரை தமிழகத்தில் திருச்சி வழித்தடம் சிறந்த முறையில் உள்ளது. இந்த வகையில் வரும் மார்ச் 28ஆம் தேதி முதல் மூன்று புதிய வழித்தடத்தில் விமானங்கள் இயக்கப்பட உள்ளது. திருச்சியிலிருந்து அபுதாபிக்கும், திருச்சியிலிருந்து தோகாவுக்கும் நேரடி விமான சேவை வாரத்தில் நான்கு நாட்கள் இயக்கப்பட உள்ளது. இது தவிர ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் உள்ளூர் விமான சேவையில் அதிக கவனம் செலுத்துவது கிடையாது. எனினும் திருச்சியிலிருந்து தலைநகர் டெல்லிக்கு தினசரி நேரடி விமான சேவை இல்லை. இந்த குறையை தீர்க்கும் வகையில் திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவை ஒரு மார்ச் 28ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. மதுரையில் இருந்து டெல்லிக்கு தினமும் இயக்கப்படும்  4 விமானங்களில் ஒரு விமானம் திருச்சி- மதுரை- டெல்லி என்ற வழித்தடத்தில் வரும் மார்ச் 28ஆம் தேதி முதல் இயக்கப்படும். திருச்சியிலிருந்து வாரத்திற்கு 35 விமானங்கள் இயக்கப்படுகிறது. ஏற்கனவே இயக்கப்படும் துபாய், சார்ஜா, சிங்கப்பூர் ஆகிய விமானங்களின் சேவை தொடர்ந்து நடைபெறும் என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.


செய்தி- சிறப்பு செய்தியாளர். திருச்சி..


Popular posts
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image