திருப்பத்தூரில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் மற்றும் இருசக்கர வாகனம் வழங்கும் விழா...
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் தாமலேரி முத்தூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ் நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூபாய் 107,73 கோடி வங்கி கடன்கள் மற்றும் உழைக்கும் மகளிர்க்கு தமிழக அரசு சார்பில் மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் சிவனருள் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு தமிழக வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சரும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் கே.சி. வீரமணி கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில்.
தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வழியில் தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அம்மா அரசு. இதற்கு முன்னால் இருந்த திமுக ஆட்சி காலத்தில் இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தபடவில்லை. ஆனால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு தெரியும் பெண்களுக்கு எந்த மாதிரியான திட்டங்கள் கொடுத்தால் அவர்கள் வாழ்கையில் முன்னேற்றம் அடையும் இந்த வகையில் தான் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் மற்றும் இலவச மடிக்கணினி, திருமண வைப்புநிதி, மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு நிதி உதவி, குறிப்பாக பெண்கள் முன்னேற்றம் அடைய பெண்கல்வி மிகவும் முக்கியமானது. அதன் அடிப்படையில் தனியார் நிறுவனங்களில் பணி ஆற்றும் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் திட்டங்கள் இப்படி பல திட்டங்களை மகளிர்களுக்கு தொடர்ந்து அம்மா வழியில் வழங்கி வரும் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையில் கீழ் பணி ஆற்றுவதை நான் பெருமையாக கருதுகிறேன் என பேசினார். இதில் மாவட்ட திட்ட இயக்குநர் சிவராமன், முன்னாள் ஒன்றிய குழுத்தலைவர் ரமேஷ் உட்பட மகளிர் குழுக்கள் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி திட்ட அலுவலர் கலைச்செல்வன் நன்றி கூறினார்...
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..
செய்திகள்- கோவி.சரவணன்...