செங்கல்பட்டு அருகே புதிய காவல் நிலையத்தை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் பூந்தண்டலம் பகுதியில் ரூ.78 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட சதுரங்கப்பட்டினம் காவல் நிலைய கட்டிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அதைதொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி.கண்ணன் குத்துவிளக்கேற்றி மற்றும் இனிப்புகள் வழங்கி பணிகள் துவக்கிவைத்தார்.