சேலத்தில் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்து கிரிக்கெட் விளையாடிய முதல்வர் பழனிசாமி.


சேலம்;


சேலத்தில் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்து கிரிக்கெட் விளையாடிய முதல்வர் பழனிசாமி.


சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள காட்டு வேப்பிலைப்பட்டியில் சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை தமிழக முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.


சுமார் 16 ஏக்கர் பரப்பளவில் 2 லட்சத்து 5 ஆயிரம் சதுர அடியில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட், பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ரூபா குருநாத் மற்றும் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, செல்லூர் ராஜு, செங்கோட்டையன், தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


விழாவில் பேசிய ராகுல் டிராவிட், "அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்கள் சிறிய நகரங்கள், கிராமங்களில் இருந்துதான் வரவுள்ளார்கள். சேலத்தில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி. இந்த கிரிக்கெட் மைதானத்தில் என்னால் விளையாட முடியவில்லை என்பது வருத்தமளிக்கிறது. சேலத்தைச் சேர்ந்த பந்து வீச்சாளர் நடராஜன் இளம் வீரர்களுக்கு ஊக்கமளிப்பவராக உள்ளார் என  பேசினார். அதன்பின்  விழா முடிந்தவுடன் மைதானத்திற்கு வந்த முதல்வர் பழனிசாமி பேட்டிங் செய்ய கிரிக்கெட் வீரர்  ராகுல் டிராவிட் பவுலிங் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.


tamilsudarr.page


செய்தி- சிறப்பு செய்தியாளர்...






Popular posts
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image