தமிழ்நாட்டில் வாழும் ராஜராஜ சோழன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
அமைச்சர் ராஜேந்திரபாலாஜி புகழாரம்...
நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் உள்ள ஸ்ரீ அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது தந்தையின் சதா பிஷேக திருமணவிழாவை முன்னிட்டு வருகை தந்தார் .
அதன்பின் செய்தியாளர்களிடம் கூறுகையில்..
ஒருங்கிணைந்த டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக பாதுகாக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார் இந்த வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு தமிழகத்தில் அனைவரும் வரவேற்றிருக்கிறார்கள்.இதை சட்ட வரைமுறையை பார்க்கும் வகையில் வருகின்ற பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே இதற்கான சட்டத்தை நிறைவேற்றப்படும். மீத்தேன்,ஷேல் கியாஸ் உள்ளிட்ட திட்டங்களுக்கு திமுக ஆட்சி காலத்தில் தான் அனுமதி அளிக்கப்பட்டு அதற்கான கையெழுத்தை அப்போதைய துணை முதல்வரும் தற்போதைய திமுக தலைவர் மு க ஸ்டாலின் தான் கையெழுத்திட்டு அனுமதி கொடுத்தார். அதன் விளைவாக இன்று டெல்டா மாவட்டப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதை பார்த்த தமிழக முதல்வர் தானும் ஒரு விவசாயி என்ற முறையில் இந்த வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பினை உலகத்தில் வாழும் 8 கோடி தமிழ் மக்களும் வரவேற்று முதல்வரை மனதார பாராட்டி வருகின்றனர். இந்த அறிவிப்பின் மூலம் எதிர்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி தவித்து வருகிறார். இதை வைத்து அரசியல் செய்யலாம் என்று எண்ணிய அவருக்கு தமிழக முதல்வர் சரியான சவுக்கடியை கொடுத்துள்ளார். திமுக தலைவர் மு க ஸ்டாலின் மிகப்பெரிய நடிகர் தனது நடிப்பின் மூலம் தமிழக மக்கள் மத்தியில் இனி என்ன செய்யப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சோழ மண்டலத்தை பாதுகாக்க தற்பொழுது ராஜராஜசோழனாகவே மாறி இருப்பது மிகவும் பெருமையாக உள்ளது. வருகின்ற ஏப்ரல் மாதத்தில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கும் மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் அதிமுக கூட்டணி அமோக இடங்களில் வெற்றி பெற்று வெற்றிக்கனியை தமிழக முதல்வர் அவர்களுக்கு சமர்ப்பிக்கப்படும் என கூறினார்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..
http.tamilsudarr.page