திருப்பத்தூரில் அதிமுக அரசை கண்டித்து திமுக- பாமக, விசிக இணைந்து போராட்டம்...
வேலூர் மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக கடந்த ஆண்டு தமிழக அரசு திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் என மூன்று மாவட்டங்களாக பிரித்தது. அதன்பின் திருப்பத்தூர் மாவட்ட தலைநகரான திருப்பத்தூர் நகரில் கடும் போக்குவரத்து நெரில் அடிக்கடி ஏற்பட்டு பெரும் விபத்துகள் ஏற்பட்டன. அதையடுத்து மாவட்ட ஆட்சியர் சிவனருள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டனர். அப்படி இருந்தும் விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை இதற்கு காரணமாக இருப்பது ஆட்டோக்கள் தான் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மற்றும் எஸ்பி இடமும் தொடர்ந்து புகார் அளித்த வண்ணம் இருந்தன. இதையடுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமாரின் உத்தரவின் பேரில் சேர் ஆட்டோக்களுக்கு மாற்று ஏற்பாடாக புதுப்பேட்டை சாலையில் இருந்து ரயில்வே சாலை வழியாக பழைய பேருந்து நிலையம் ஒதுக்கப்பட்டது. அதேபோல் பெட்ரோல் ஆட்டோக்களுக்கு ஒருசில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதை கண்டித்து ஆட்டோ ஓட்டுனர்கள் கடந்த வாரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து தாங்களுக்கு மெயின் ரோடு வழியாக ஆட்டோக்கள் இயக்க அனுமதி அளிக்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர். அப்போது மாவட்ட ஆட்சியர் பொதுமக்கள் நலன் மற்றும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நீங்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு உதவ வேண்டும். அதன்பின் உங்களுக்கு மாற்று வழிவகை செய்யப்படும் என உறுதி அளித்தார். அதைத்தொடர்ந்து ஆட்டோ ஓட்டுனர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முறையிட்டனர். அவரும் தற்போது திருப்பத்தூர் நகரில் பெரும் அளவில் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படுகின்றன மற்றும் விபத்துகளும் ஏற்படுகின்றன எனவே பொதுமக்களின் நலன் கருதி ஒருசில மாதங்கள் காத்துயிருங்ககள் அதன்பின் உங்கள் கோரிக்கை படி மாற்று ஏற்பாடுகள் செய்யபடும் என கூறினார். இதனை கண்டித்து டீசல் மற்றும் பெட்ரோல் ஆட்டோ ஓட்டுனர்கள் ஒன்று கூடி 24- 02-20 இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த போராட்டத்தில் தமிழக அரசியலில் எலியும் பூனையாக உள்ள திமுக- பாமக மற்றும் தனது நேர் எதிரி என்று பாமக வால் தமிழகம் முழுவதும் சொல்லபடுகிறன விடுதலை சிறுத்தைகள் கட்சி என மூன்று கட்சி நிர்வாகிகள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட சம்பவம் தற்பொழுது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் தான் கூட்டணியில் இருக்கும் அதிமுக அரசை கண்டித்து பாமக நிர்வாகிகள் கூட்டணி தர்மத்தை மீறி எதிர்கட்சிகள் நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்ட சம்பவம் அறிந்த அதிமுக நிர்வாகிகள் இனி பாமக திமுக கூட்டணிக்கு செல்ல இந்த ஆர்பாட்டம் ஒரு அச்சாரமாக பயன்படுத்திக் கொள்ளுமா என்ற கோணத்தில் புலம்பி வருகின்றனர். அதிமுக பாமக கூட்டணி மேல்மட்டத்தில் இணக்கமாக இருந்தாலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிமுக கூட்டணியில் எப்போதும் ஒரு விரிசல் இருந்து கொண்டேதான் இருக்கிறது. அதற்கு எடுத்துக்காட்டு கந்திலி ஒன்றியத்தில் கிராம பஞ்சாயத்துகளில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்கள் (கிளார்க்) பதவிக்கு பாமக தரப்பில் இரண்டு சீட்டுகள் கேட்டும் இதுவரை கிரீன் சிக்னல் கொடுக்கப்படவில்லை என்பது ஒரு குற்றச்சாட்டு. தற்போது போராட்டம் என்ற பெயரில் திமுக- பாமக- விசிக கூட்டணி இது எதில் போய் முடியுமோ என்று மாங்கனி நிர்வாகிகளும் மற்றும் எந்த நேரத்திலும் நமது கூட்டணியில் இருந்து மாம்பழம் வெளியேறும் என்ற அச்சத்தில் இரட்டை இலை நிர்வாகிகள் உள்ளனர் என்பது தற்போது திருப்பத்தூர் மாவட்ட அரசியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..
tamilsudarr.page..
செய்திகள்- கோவி. சரவணன்....