திருப்பத்தூர் அருகே போலி மருத்துவர் கைது. அரசு மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை பெற மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஊராட்சி ஒன்றியம் பெரியகண்ணாலப்பட்டி கிராமத்தில் போலி மருத்துவர் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வருவதாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருளுக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்துள்ளனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருப்பத்தூர் வருவாய் துறையினர் ஆய்வில் ஈடுபட்டபோது மருத்துவம் படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் (48) என்பவரை பிடித்து மாவட்ட பொது சுகாதார மருத்துவ அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். பொது சுகாதார துறை சார்பில் கந்திலி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் கந்திலி போலீசார் ரவிச்சந்திரன் வழக்கு பதிவு செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி, திருப்பத்தூர், ஆலங்காயம், வாணியம்பாடி, ஆம்பூர் போன்ற பகுதிகளில் போலி மருத்துவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சைமருத்துவர்கள் அளிக்கப்படுவதில்லை இதனால் பொது மக்கள் அரசு மருத்துவமனையில் பல மணி நேரம் காத்திருக்கும் அவல நிலை ஏற்படுகிறது. இந்த பிரச்சினையில் போலி மருத்துவர்களை அதிகளவில் பொதுமக்கள் நாடுகின்றனர் என்பது சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டு. இதற்கு மாவட்ட ஆட்சியர் அரசு மருத்துவமனைகளில் உரிய சிகிச்சைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.
செய்தி- கோவி. சரவணன்...