திமுக தலைவர்  ஸ்டாலின் வாழ்த்துக்கள்  வீண்போகவில்லை பாஜகவினர் கிண்டல் . விரைவில் உத்தவ் தாக்கரே காலி...

திமுக தலைவர்  ஸ்டாலின் வாழ்த்து  வீண்போகவில்லை பாஜகவினர் கிண்டல் . விரைவில் உத்தவ் தாக்கரே காலி...


மஹாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தனது மகன் ஆதித்யாவுடன் சென்று பிரதமர் நரேந்திர மோடியை பார்த்து தனியாக ஆலோசனை நடத்தியிருப்பது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மஹாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் கடந்த ஆண்டு கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக மற்றும் சிவசேனா கட்சி அதிக தொகுதியில் வெற்றி பெற்றது, இருப்பினும் முதல்வர் பதவியை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட போட்டியின் காரணமாக கூட்டணி, முறிந்தது, அதனை தொடர்ந்து பல்வேறு அரசியல் சம்பவங்கள் அரங்கேறின.



யாரும் எதிர்பாராத விதமாக சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன, முதல்வராக உத்தவ் தாக்கரே பொறுப்பேற்றார், ஆனால் முக்கிய மந்திரி பதவிகள் அனைத்தையும் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் எடுத்துக்கொண்டன.


இதனால் அதிகாரமில்லாத முதல்வராக வலம்வந்தார் உத்தவ் மேலும் தனது கட்சியின் மிகப்பெரிய பலமான இந்துத்துவ கொள்கையும் கொஞ்சம் கொஞ்சமாக சரிய ஆரம்பித்தது, இதனால் அதிர்ச்சி அடைந்த சிவசேனா எப்போது வேண்டுமானாலும் ராஜினாமா செய்யலாம் என கூறப்படுகிறது, இந்நிலையில் தான் முதல்வர் உத்தவ் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். வெளியில் மாநில திட்டங்கள் குறித்து பேசியதாக கூறப்பட்டாலும், உள்ளுக்குள் புலம்பி தீத்திருக்கிறார் உத்தவ், எப்படி குமாரசாமியை கர்நாடகாவில் டம்மியாக வைத்து காங்கிரஸ் ஆட்சி நடத்தியதோ அதே போன்று நிலைமை இருப்பதாக புலம்பி இருக்கிறார். ஆனால் மோடி எதற்குமே பிடிமானம் கொடுக்கவில்லையாம். இந்நிலையில் இந்த செய்தி வெளியானது முதல் பாஜகவினர் கிண்டல் அடித்து வருகின்றனர், பாஜகவை எதிர்க்க வேண்டும் என்பதற்காக திமுக தலைவர்  ஸ்டாலின் உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழாவிற்கு சென்றபோதே தெரியும் விரைவில் ஆட்சி கவிழும் என்று. குறிப்பாக  ஸ்டாலின் கர்நாடக மாநில ஜனதா கட்சி தலைவர்  குமாரசாமி முதல்வராக பதவியேற்புக்கு  வாழ்த்து சொன்னார் அப்போது  என்ன நடந்தது குமாரசாமி பதவி காலியானது.  அதுபோல் மகாராட்டிர மாநில முதல்வர்  உத்தவ் தாக்கரேவிற்கு திமுக தலைவர்  ஸ்டாலின் சொன்ன வாழ்த்துக்கள் வீண்போகவில்லை விரைவில் அது நடக்கும் எனவும் கிண்டல் அடித்து வருகின்றனர். அதேபோல்  மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மஹாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்களில் எப்போது வேண்டுமானாலும் தீடீரென ஆட்சி மாற்றம் ஏற்படலாம் என்று  அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..


tamilsudarr.page


செய்திகள்- கோவி.சரவணன்..


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image