சொத்தை அபகரிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஒரு குடும்பம் தீக்குளிக்க முயற்சி..
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்டத்தில் இருந்து பொதுமக்கள் தங்கள் பகுதி பிரச்சினைகள் குறித்து மனு அளித்து அதற்கு தீர்வு காணுவது வழக்கம் ஆகும். இதுபோன்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திங்கள் கிழமை அன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் ஒருவர் தான் வைத்திருந்த மண்ணெண்ணெயை தன் மீதும் மற்றும் மகன், மகள் மீது ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவர்களை தடுத்து பத்திரமாக மீட்டனர். அதனையடுத்து அந்தப் பெண்மணியை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டதில். அவர் திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் வேடியப்பன் நகர் பகுதியைச் சேர்ந்த பிரகாசம் என்பவருடைய மனைவி ராதா(37) என்றும் எனது கணவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். கணவனுக்கு சொந்தமாக திருப்பத்தூர்- தர்மபுரி மெயின் ரோடு ஓரமாக 34 சென்ட் நிலம் உள்ளது அதை அபகரிக்கும் முயற்சியில் எனது கணவரின் தம்பி சிவகுமார் மற்றும் ஒருசிலர் என்னையும் எனது மகள் நித்யா மற்றும் மகன் தீபன் சக்ரவர்த்திவையும் கொலை செய்யும் நோக்கத்தோடு 9-02-20 அன்று இரவு அடையாளம் தெரியாத அடியாட்களுடன் வந்து நாங்கள் குடியிருக்கும் வீட்டை அடித்து உடைத்து துவம்சம் செய்தனர். இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை இதனால் மனவேதனை அடைந்த நான் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டேன் என கூறினார். இச்சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுமார் 1 மணி நேரம் பரபரப்பு காணப்பட்டது..
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.
செய்திகள்- கோவி.சரவணன்..