திருக்கோவிலூர் அருகே தேடப்பட்டு வந்த சாராய வியாபாரி அதிரடியாக கைது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி வீரபாண்டி கிராமம். இந்த கிராமத்தில் கள்ளச்சாராயம் மட்டும் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமாருக்கு தொடர் புகார்கள் வந்தது.
இதனையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரின் உத்தரவின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் ஷங்கர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் அரகண்டநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் பாண்டியன், உதவி ஆய்வாளர் திருமால் மற்றும் காவலர்களின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் கஞ்சா மற்றும் கள்ளச்சாராயம் விற்கும் முக்கிய குற்றவாளியான கருப்பு மணிகண்டன் என்கிற மணிகண்டனை அரகண்டநல்லூர் போலீசார் கடந்த இரண்டு ஆண்டுகளாக தேடிவந்தனர். இதனையடுத்து, தலைமறைவு குற்றவாளியான மணிகண்டன் வீரபாண்டி கிராம டாஸ்மாக் கடையின் பின்புறம் இருப்பதாக வந்த ரகசிய தகவலையடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீசார் அங்கு சாராய விற்பனையில் ஈடுபட்டிருந்த மணிகண்டனை சுற்றி வளைத்து பிடித்தனர்.
மேலும், அவனிடமிருந்து 60 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 லாரி டுயுபுகளில் இருந்த கள்ளசாராத்தை கைப்பற்றிய போலீசார் கருப்பு மணிகண்டனை கைது செய்தனர். இவர் மீது கடந்த 2018 மற்றும் 2019ல் கஞ்சா மற்றும் கள்ள சாராயம் விற்பது தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.
செய்தி- சிறப்பு செய்தியாளர்...