பாமகவின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக முதல்வர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்...
காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக முதல்வர் இன்று சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிவிப்பு.
சேலம் மாவட்டம் தலைவாசலில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ள ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக்கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். விவசாய பெருவிழா மற்றும் கண்காட்சியை தொடங்கி வைத்த முதலமைச்சர், 15 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
விழாவில் பேசிய முதலமைச்சர் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்தார். இதற்கான சட்டம் விரைவில் கொண்டுவரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
டெல்டா மாவட்டங்களை ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும் முதல்வர் நிகழ்ச்சியில் கூறினார். இதற்கிடையே, முதலமைச்சரின் அறிவிப்பு பல்வேறு தரப்பில் வரவேற்ப்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் இந்த அறிவிப்பு மிக்க மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் நீண்டகால கோரிக்கை தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றி உள்ளதால் 2021 இல் நடைபெறும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பாமக கூட்டணி மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. எது எப்படியோ காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கு ஆளும் அதிமுக அரசு ஒரு பலமான மகிழ்ச்சியை கொடுத்து உள்ளதால் இனி காவேரி டெல்டா பகுதி அதிமுக கைவசம் வருமென அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்...
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.
செய்தி- சிறப்பு செய்தியாளர்.