திருப்பத்தூரில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மத்திய அரசு கொண்டுவந்த இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் முற்றுகை போராட்டம். நடைபெற்றது. இதில் திருப்பத்தூர் மாவட்ட திமுக இலக்கிய அணி அமைப்பாளர் சபியுல்லா, ஆம்பூர் முன்னாள் எம்எல்ஏ அப்துல் பாசித் .SDPI மற்றும் SDTU பிரிவு மாநில துணைத்தலைவர் முகமது ஆசாத் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாநில சிறுபான்மை தலைவர் அஸ்லாம் பாஷா தலைவர்கள் உட்பட 1000த்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு மத்திய- மாநில அரசுகளை கண்டித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அப்போது பேசிய இஸ்லாமிய அமைப்பினர்.
இஸ்லாமியர்களுக்கு இந்துக்கள் எதிரிகள் இல்லை. இந்த போராட்டமானது இந்திய பிரதமர் மோடிக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு எதிரான போராட்டமாகும். மேலும் இந்த போராட்டத்தின் மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று இல்லை, இனி தமிழகத்தில் ஒரு அமைச்சர் கூட நடமாட முடியாது அவர்கள் பலத்த போலிஸ் பாதுகாப்போடு வந்தாலும் கூட அமைச்சர்களுக்கு எதிராக முற்றுகை போராட்டம் தொடரும். மேலும் புதிய குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறவில்லை என்றால் போராட்டம் தீவிரமடையும். அப்போது எங்கள் மீது காவல்துறை துப்பாக்கியால் சுட்டால் கூட அதில் மரணமடந்தாலும் எங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம். இனி எங்கள் போராட்டம் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது என்று பேசினார்கள். இந்த முற்றுகை போராட்டம் மூலம் எவ்வித
அசம்பாவிதம் சம்பவங்கள் ஏதும் நடைப்பெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் சுமார் 1000க்கும் மேற்பட்ட போலீஸ்சார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். குறிப்பாக இந்த போராட்டம் காரணமாக திருப்பத்தூர் நகரில் பல்வேறு வழிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுகள் இல்லாமல் காவல்துறை சிறப்பாக செய்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.
செய்தி- கோவி.சரவணன்...