கன்னட நடிகை  விஜயலட்சுமியின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறும் நாம் தமிழர்.

கன்னட நடிகை  விஜயலட்சுமியின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறும் நாம் தமிழர்...


கன்னட நடிகை விஜயலெட்சுமியின்   குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்வது கேவலமானது என்று கூறிய நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளரும் நடிகர் மற்றும் இயக்குனர் என்று பல பெயர்களில் அழைக்கப்படும்  சீமான் நழுவிய நிலையில், தனக்கு தீராத தொல்லைகள் அளிக்கப்பட்டதாக விஜயலெட்சுமி மீண்டும்  புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


மேடைக்கு மேடை அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் தொடங்கி இன்னும் அரசியலுக்கே வராத ரஜினிகாந்த் வரை அனைவரையும் ஒருமையில் பேசி, என் கேள்விகளுக்கு பதில் இருக்கின்றதா? என்று ஆவேசமாக முழங்குவது நாம் தமிழர் கட்சியின் தலைமை  ஒருங்கிணைப்பாளர் சீமானின் வழக்கம்..!


என்றைக்கு நடிகை விஜயலெட்சுமி, சீமானுக்கு எதிராக பேசத் தொடங்கினாரோ அன்றில் இருந்து இன்றுவரை விஜயலெட்சுமி முன் வைத்த எந்த ஒரு குற்றச்சாட்டுக்கும் நேரடியாக பதில் சொல்லாமல் நழுவி வருகிறார் சீமான்.


இந்த நிலையில், தனது கேள்விக்கு பதில் சொல்வதைக் கூட கேவலமாக கருதும் சீமான், தனக்கு போதையில் தீராத தொல்லை கொடுத்ததாக விஜயலெட்சுமி புதிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


வெளிநாட்டில் இருந்து தன்னை மிரட்டிய நாம் தமிழர் கட்சி தம்பி ஒருவரையும் கடுமையான வார்த்தைகளால் வறுத்தெடுத்த விஜயலெட்சுமி, சீமான் தன்னை ஏமாற்றியதற்கு மன்னிப்பு கேட்கும் வரை, தனது கேள்வி கேட்கும் உரிமை போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து தற்போது தமிழக அரசியலில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் கதை தான் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...


செய்தி- கோவி. சரவணன்...


Popular posts
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image