அரசு உதவித்தொகையை வழங்குவதில்  பல இலட்சம் ரூபாய் கல்லா கட்டிய அரசு அதிகாரிகள்.

  அரசு உதவித்தொகையை வழங்குவதில்  பல இலட்சம் ரூபாய் கல்லா கட்டிய அரசு அதிகாரிகள்.


தமிழ்நாடு முழுவதும் தகுதியான நபர்களுக்கு புதிதாக OAP வழங்கச் சொல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அப்படி வழங்கப்படும் OAP-களுக்கு VAO முதல் தனி தாசில்தார் வரை ரூ.8000/-  வரை செலவு செய்ய வேண்டியுள்ளதாக தகுதி வாய்ந்த ஏழை விண்ணப்பதாரர்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர்.


அதாவது, குறைந்தபட்சம் VAO-க்கு 2000, அவரது உதவியாளருக்கு 500, RI-க்கு 1000, 
தனி தாசில்தாருக்கு 2000, 
அவரது உதவியாளருக்கு 1000. என எப்படியும் 8000/- வரை செலவாகும் என்று சொல்லி கறாராக வசூலித்து விடுவதாகவும் வேதனை தெரிவித்தனர்.


மேலும், இதன்மூலம் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தர்மபுரி உட்பட தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் தனி தாசில்தார்கள் பல இலட்சங்கள் கல்லா கட்டியுள்ளதாகவும், தற்போது அவர்களின் காட்டில்தான் மழை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.


தகுதியான நபர்களுக்கு OAP வழங்க சொல்லிதான் அரசு உத்தவிட்டுள்ளதே தவிர, அவர்களிடம் பணம் வசூல் செய்துதான் வழங்க வேண்டும் என்று கூறவில்லை.
எனவே, இதன் பேரில் மாவட்ட நிர்வாகம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


செய்தி- கோவி.சரவணன்..


Popular posts
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image