ஸ்டாலின் முதல்வர் கனவில் மண். பெரும்பான்மை மக்களின் ஓட்டை இழக்கும் திமுக..
திமுக தலைமை கழகம் தமிழகத்தில் தன்னை சாதி அரசியலுக்கு எதிரானவன் என காட்டிக்கொள்ள வெளியில் ஒரு நிலை கட்சிக்குள் ஒரு நிலை. ஆனால் தமிழக மக்கள் மத்தியில் திமுக என்றால் சாதி மற்றும் மதத்தை கடந்த கட்சி என்ற பெயர் ஆனால் உண்மை நிலவரம் வேறு? தமிழகத்தில் இயக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் சாதி மதம் ரீதியாகவும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர் என்பது தமிழக மக்களுக்கு நன்றாக தெரியவதில்லை. இதில் திமுக மற்றும் அதிமுக என்ற இரு கட்சிகளிலும் மாவட்ட செயலாளர்களை தேர்வு செய்வதில் ஒரே சமூகத்தை சார்ந்தவர்களை தான் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது திமுக தலைமை கழகம் எடுத்து இருக்கும் அதிரடி நடவடிக்கையால் பல இடங்களில் நேரடியாக கட்சிக்குள் சாதி மோதல்கள் ஏற்பட்டுள்ளன. அதில் தற்போது சேலம் மாவட்டத்தின் நிலை வேறு?? சேலம் என்றாலே அது வீரபாண்டி ஆறுமுகம் ஆனால் தற்போது வீரபாண்டி ஆறுமுகம் மகன் ராஜாவை ஓரம் கட்டும் பணியில் திமுக தலைமை சிறப்பாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அடுத்து வேலூர் என்றாலே அது துரைமுருகன் என்று அனைவருக்கும் நன்றாகவே தெரியும். துரைமுருகன் தனது மாவட்டத்தை தன் கைக்குள் வைத்துயிருக்க நினைக்கிறார் ஆனால் அது நடக்கவில்லை காரணம் சாதி மோதல்கள் அதிகம் உள்ள மாவட்டமாக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் உள்ளது. மாவட்டத்தில் பெரும்பான்மையாக வன்னியர் சமூகம் அதற்கு அடுத்த படியாக ஆதிதிராவிடர் அதற்கு அடுத்த படியாக நாயுடு, முதலியார், வெள்ளாளர், மற்ற சமூகத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். இதில் குறிப்பாக ராணிப்பேட்டை என்றால் அது காந்தி, வேலூர் என்றால் முன்னாள் எம்பி முகமது சகி, கார்த்திகேயன், தற்போது வேலூர் எம்பியும் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமார் என வலம் வருகின்றனர்.
புதிதாகஉருவாக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தில் முன்னாள் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் முத்தமிழ்ச்செல்வி, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மாவட்ட செயலாளர் தேவராஜ், முன்னாள் எம்எல்ஏ சூரிய குமார், முன்னாள் கந்திலி ஒன்றிய குழுத்தலைவரும் ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தண்டபாணி, வாணியம்பாடி வி.எஸ்.ஞானவேலன், திருப்பத்தூர் நகர செயலாளர் எஸ். ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் அன்பழகன், திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி என இப்படி பட்டியல் நீண்டுகொண்டே வருகிறது. ஆனால் அதிக பெரும்பான்மை வாக்கு வங்கி உள்ள வன்னியர் சமுதாயத்தில் மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பத்தூர் நகரில் திமுகவின் ஒரு தரப்பினர் போர் கொடியை தூக்கியுள்ளனர். இதற்கு காரணமும் சமுதாய ரீதியான சண்டைதான் என ஒரு தரப்பிலிருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. எது எப்படியோ திமுகவில் பல இடங்களில் வன்னியர்களின் அரசியல் பிரவேசத்தை முடக்கும் பணியில் திமுக தலைமை படிப்படியாக நிர்வாகிகளை குறைந்து வருவதால். பெரும்பான்மை சமுதாயமாக கருதப்படும் வன்னியர்கள் சமுதாயத்தில் உள்ள திமுகவினர் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர். திமுக என்ற கட்சியை தாங்கிப் பிடிப்பதும். உதயசூரியன் சின்னத்தை திமுகவுக்கு வழங்கியது இந்த பெரும்பான்மையான வன்னிய சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வருகின்ற 2021- ஆண்டில் நடைபெறும் தமிழக சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது திமுக தலைவர் மு க ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்ற கனவில் திமுக தலைமை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது . ஆனால் திமுகவுக்கு அதிகளவில் வாக்களிக்கும் வன்னியர்களை ஓரங்கட்டினால் எப்படி திமுகவிற்கு வாக்குவங்கி கிடைக்குமென திமுகவில் உள்ள வன்னிய நிர்வாகிகள் திமுக தலைமை மீது போர்கொடியை தூக்கி உள்ளனர். எது எப்படியோ திமுகவில் நடக்கும் இந்த சாதி மோதலால் பயனடைய போவது யார்? அரசியல் வட்டாரத்தில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.
செய்திகள்- சிறப்பு செய்தியாளர்.