நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தின் சம்பளம் எவ்வளவு தெரியுமா இன்றைய ரெய்டிலில் பரபரப்பு.

நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தின் சம்பளம் எவ்வளவு தெரியுமா இன்றைய ரெய்டிலில் பரபரப்பு.


சென்னை: ஆபரேஷன் சாக்லேட் என்ற பெயரிலான பிகில் ரெய்டில் சிக்கிய பணத்தை கண்டு ஐடி அதிகாரிகளே மலைத்து போயிருக்கின்றனர்.


விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் அதிக சம்பளம் வாங்கி அதற்கான வரியை முறையாக செலுத்தவில்லை என்பது புகார். அதன் அடிப்படையில் அவரிடத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த விஜயிடத்தில் விசாரணை நடத்தச் சென்றனர். நேரில் வருவதாக அவர் கூற முடியாது என்ற அதிகாரிகள் அவரை காரில் ஏற்றி சென்னை அழைத்து சென்றனர். சென்னையில் சாலிகிராமம், பனையூர் என்று சோதனை நீடிக்கிறது. 18 மணி நேரமாக பனையூர் வீட்டில் இன்னமும் நீடிக்கும் இந்த விசாரணையில் விஜயின் வங்கி கணக்குகள், அவரின் சம்பளம் குறித்த விவரங்கள் குறித்தும் விசாரிக்கப்பட்டன. பிகில் படத்தில் நடித்ததற்காக விஜய் ரூ.30 கோடி சம்பளம் பெற்றதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. ஆனால், உண்மையில் அவரது சம்பளம் ரூ.50 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும், விஜய்யிடம் இது குறித்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதோடு வருமான வரித்துறை அதிகாரிகள் அவரது மனைவி சங்கீதாவிடமும் வாக்குமூலம் பெற்றுள்ளனர். பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் கிடைத்த பணத்தில் தொடங்கிய இந்த சோதனை விஜய் வீட்டில் இன்னும் மையம் கொண்டிருக்கிறது. அன்புச் செழியன் வீட்டில் நடந்த சோதனையில் ஏஜிஎஸ் எண்ட்ர்டெயின்மெண்ட் அலுவலகக் கணக்குக்கு பணம் மாறியிருப்பதற்கான ஆதாரங்களை அதிகாரிகள் கைப்பற்றி இருக்கின்றனர். சோதனையில் பிகில் படத்துக்காக விஜய்க்கு கொடுக்கப்பட்ட சம்பளம் பற்றிய சில ஆவணங்களும் சிக்கியிருக்கின்றன. மொத்தம் 2வது நாளாக நீடிக்கும் இந்த ரெய்டு மற்றும் விசாரணையில் மட்டும் 77 கோடியும், 300 கோடிக்கு வரி ஏய்ப்புக்கான ஆதாரங்கள் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  அதை வருமான வரித்துறை அதிகாரப் பூர்வமாக ஐடி துறை அறிவித்துள்ளது.  பைனான்சியர் அன்புச்செழியன் சொந்தமாக சென்னை, மதுரையில் உள்ள இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 77 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. ஆபரேஷன் சாக்லேட் என்ற பெயரில் இந்த சோதனையால் விஜய் தரப்பு ஆடி போயிருக்கிறதாக தெரிகிறது.
இந்த விவகாரத்தில் அவருக்கு மேலும் நெருக்கடி தரப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ரெய்டு ஒரு பக்கம் நடக்க… மாஸ்டர் ஷூட்டிங் நடக்கவில்லை. எல்லோரையும் படதயாரிப்பு நிர்வாகம் வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறது.  தமிழ் சினிமா உலகில் இந்த ரெய்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள் உங்க தமிழ் சுடரில்..


tamilsudarr.page.


செய்தி- கோவி.சரவணன்...


Popular posts
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image