திருப்பத்தூர் அருகே டீக்கடை மாஸ்டருக்கு கத்தி குத்து. போலிசார் விசாரணை..
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி பகுதியைச் சேர்ந்தவர் டீ மாஸ்டர் குமார் (45). இவர் கந்திலி காவல் நிலையம் எதிரே உள்ள டீக்கடையில் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இன்று காலை வழக்கம்போல டீ கடையில் பணி செய்துகொண்டு இருந்தபோது கந்திலி அடுத்த சின்னூர் பகுதியைச் சேர்ந்த நந்தி என்பவரின் மகன் மணி(20) டீ கடையில் உள்ள டீ மாஸ்டரை பார்த்து முறைத்ததாக கூறப்படுகிறது.அப்போது டீ மாஸ்டர் குமார் ஏன் தம்பி என்னை இப்படி முறைத்து செல்கிறாய் என்று கேட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பொதுமக்கள் இருவரையும் சமாதானம் படுத்தி இளைஞரை அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து வந்த இளைஞர் தனது கையில் கத்தியுடன் வந்து மீண்டும் டீ மாஸ்டரிடம் வாக்கு வித்தியாசத்தில் ஈடுபட்டனர். அப்போது தனது கையில் இருந்த கத்தியைக் கொண்டு வயிற்றுப் பகுதியில் குத்தினார். இதில் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கீழே விழுந்தார். உடனடியாக அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதன் பின் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து கத்திக்குத்து சம்பவத்திற்கு வேறு ஏதாவது முன்விரோத காரணமா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.
செய்திகள்- கோவி.சரவணன்...