எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அவர்களின் வாரிசுகள் அதிமுக தொண்டர்கள் தான் என முதலமைச்சர் பெருமிதம்..

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அவர்களின் வாரிசுகள் அதிமுக தொண்டர்கள் தான் என முதலமைச்சர் பெருமிதம்..


சேலம் மாநகர
அஇஅதிமுக மாவட்ட கழகத்தின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72 வது பிறந்தநாளை முன்னிட்டு சேலத்தில் பிறந்த நாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.


இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு விழாப் பேருரையாற்றி 47,072 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


விழாவில் அவர் பேசுகையில்,"  மக்கள் மனதில் வாழுகின்ற தலைவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, அறிஞர் அண்ணா.


அவர்களுக்கு வாரிசுகள் இல்லை. இங்கு இருக்கும் நாம்தான் வாரிசு.


1கோடியே 85 லட்சம் குடும்பங்களுக்கு விலையில்லா பொருட்கள் கொடுத்தார் ஜெயலலிதா.


ஆனால் திமுக 2006 2011 ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தில் நிலமில்லா விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் கொடுப்பதாக கூறினார் ஆனால் கொடுக்கவே இல்லை.


நில அபகரிப்பு தான் செய்தார்கள் அதனால் தான் நில அபகரிப்பு பிரிவு என்று ஒரு பிரிவையே  உருவாக்கினார் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.


தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொரு ஏழை குடும்பத்து குழந்தைகள் நலமோடு வாழ ஜெயலலிதாவின் தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தினார்.


அம்மா ஊட்டச்சத்து பெட்டகம் திட்டம் கொடுத்தார். ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கும் சூழ்நிலையைப் பார்க்கிறோம்.


ஏழைகள் நல்ல சிகிச்சை பெறுவதற்காக 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் காப்பீடு வசதி கொடுத்து வருகிறோம்.


11 மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கியிருக்கிறோம். 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கியிருக்கிறோம் .


சேலம் மாவட்டத்தில் 3 தாலுகாக்கள்  தொடங்கி இருக்கிறோம்.


நிர்வாகத் திறன்மிக்க அரசாங்கத்தை  உருவாக்க வேண்டும் என்பதற்காக இதை செய்துள்ளோம்.


சேலத்தில் புதிய இரண்டு அடுக்கு மேம்பாலம் இன்னும் ஒரு மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்.


ஆனால் திமுக ஆட்சியில் சேலம் மாநிலத்திற்கு என்ன செய்தீர்கள்?


சாலை வசதிகள், குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.


500 படுக்கை கொண்ட மகப்பேறு மருத்துவமனை சேலத்திற்கு கொடுத்தவர் ஜெயலலிதா. மருத்துவ துறையில் புதிய வரலாறு படைத்துள்ளது இந்த அரசு.


அரசு மருத்துவமனையில் கையில்லாதவர்க்கு இரண்டு கைகளை பொறுத்தி சாதனை படைத்திருக்கிறது.


அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்குவதற்காக உயர் தொழில்நுட்ப கருவிகளை வழங்கி வருகிறோம்.


குடிமராமத்து திட்டம் குறித்து ஸ்டாலின் விமர்சித்து வருகிறார் .சரியில்லை என்கிறார் .


ஆனால் இந்தியாவிலேயே தமிழகத்தை எல்லா அரசும் பாராட்டிக்கொண்டிருக்கிறது , குடி மராமத்து திட்டத்திற்காக.


நீர் மேலாண்மை என்கிற திட்டம் மூலம் தடுப்பணைகள் கட்டி வருகிறோம். கடலில் வீணாக கலக்கும் நீரை தடுப்பணை கட்டி அந்த பகுதி நிலத்தடி நீரை சேமித்து வைத்திருக்கிறோம். இதனால் டெல்டா மாவட்டங்கள் 7 லட்சம் ஏக்கர் பரப்பளவில் வேளாண்மை கூடுதலாக செய்யப்படுகிறது.


விவசாயிகளை கொச்சைப்படுத்தி பேசுகிறார் ஸ்டாலின். என்னை விசித்திர விவசாயி என்கிறார்.


ஆமாம் நான் விசித்திர விவசாயி தான். எண்ணற்ற திட்டங்களை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறேன். அதனால் உங்கள் பாராட்டுக்கு நன்றி.


பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று காவிரி டெல்டா மாவட்டங்களை அறிவித்தேன். அதை ஸ்டாலினால் பொறுக்க முடியாமல் விமர்சனம் செய்கிறார்.


மீத்தேன் திட்டத்தை கொண்டு வந்தது திமுக. அதை தடுத்து நிறுத்தினோம். நீங்கள் விவசாயிகளுக்கு நன்மை செய்பவர்களா?


சட்ட முன்வடிவை கொண்டு வந்தோம். நீங்கள் அதை எதிர்த்து சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தீர்கள். இவர்களுக்கு காவிரி டெல்டா விவசாயிகள் சரியான சம்மட்டி அடியை தேர்தலில் கொடுக்க வேண்டும்.


தேர்தலில் அறிவித்த எல்லா அறிவிப்புகளையும் திட்டங்களாக செயல்படுத்தி வருகிறோம். இதுவரை சுமார் 48 லட்சம் மடிக்கணினிகள் வழங்கி இருக்கிறோம்.


தாலிக்கு தங்கம் திட்டம் மூலம் 8 கிராம் தங்கம் பயனாளிகளுக்கு வழங்கி வருகிறோம்.


ஆசியாவிலேயே மிகப் பெரிய கால்நடை பூங்காவை தலைவாசல் பகுதியில் சர்வதேச தரத்தில் அமைத்து வருகிறோம்.


முதலமைச்சர் குறைதீர்க்கும் சிறப்பு முகாமை நடத்தி வருகிறோம். 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என்று கூறி உள்ளோம்.


தகுதி உடைய எல்லா முதியவர்களுக்கும் உதவி தொகை வழங்குவோம்.


எந்த திட்டத்தையும் நிறைவேற்ற வில்லை என்று ஸ்டாலின் கூறியுள்ளார். ஆனால் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி தேசிய விருதுகளை தமிழக அரசு பெற்று உள்ளது.


இந்தியாவில் நிர்வாக ஆளுமை மிக்க மாநில அரசு வரிசையில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.


மூன்று ஆண்டுகள் முடிந்து நான்காவது ஆண்டில் எங்கள் அரசு அடி எடுத்து வைத்து உள்ளது. 2021 ஆண்டும் அதிமுக ஆட்சியில் அமரும். அதை ஸ்டாலின் பார்க்கத்தான் போறீங்க.


எங்கள் ஆட்சியில் ஊழழே நடக்கவில்லை. நடந்தது எல்லாம் உங்கள் ஆட்சியில் தான்.


பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார் ஸ்டாலின். நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலின்போது மக்ளை குழப்பி பொய்யை சொல்லி வெற்றி பெற்றது திமுக.


ஆனால் உள்ளாட்சி தேர்தலில் அந்த பொய் எடுபடவில்லை. மக்கள் அதிமுகவுக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்தார்கள்.


விரைவில் மாநகராட்சி தேர்தல் வருகிறது. சேலத்தில் உள்ள 60 வார்டுகளையும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வையுங்கள்.


மக்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றுகிற அரசு எங்கள் அரசு.


தொழில் வளம் மிகுந்த மாநிலம் தமிழகம்.


3 லட்சம் கோடி ரூபாய் முதலீடை ஈர்த்துள்ளோம். புதிய புதிய தொழிற்சாலைகளை கொண்டு வருகிறோம்.


சேலத்தில் ராணுவத்தளவாடம் தயாரிப்பு செய்யும் ஆலை வரவுள்ளது.


சேலம் மாவட்டம் தன்னிறைவு பெற்ற மாவட்டமாக உருவாகும் ‌ .


எட்டு வழி சாலை எக்ஸ்பிரஸ் சாலையாக மாற்றம் பெற்று விரைவில் வரவுள்ளது‌ .


7 பேர் விடுதலை குறித்து ஸ்டாலின் கேட்கிறார், திமுக ஆட்சியில் நளினியை மட்டும் விடுதலை செய்ய முடிவு செய்தனர். அது தொடர்பான முடிவில் ஸ்டாலின் துரைமுருகன் கையெழுத்து இட்டுள்ளனர்.


அதிமுகவை பொறுத்த வரை மக்கள் தான் முதலமைச்சர்.


அதிமுக ஆட்சியில் கடன் அதிகமாகிவிட்டது என்று கூறி வருகின்றனர்.


எங்கள் அரசைப் பொறுத்தவரை மக்கள் திட்டங்களுக்காக கடன் பெற்று செலவு செய்து வருகிறோம்.


பாலங்கள் கட்டுகிறோம். சாலைகள் போடுகிறோம்.அதனால்தான் புதிய தொழில் நிறுவனங்கள் தமிழ்நாடு நோக்கி வருகின்றன.


சிஏஏ குறித்து சிறுபான்மை மக்கள் மத்தியில் ஒரு கருத்தை திமுக பரப்பி வருகிறது. தேசிய மக்கள் தொகை பதிவேடு சட்டம் கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சி. அதற்கு துணை நின்றது திமுக.


விஷவிதையை விதைத்தது திமுக. அப்போது எடுத்தது போல் இப்போதும் எடுக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதில் மூன்று அம்சம் சேர்க்கப்பட்டது. அது குறித்து மத்திய அரசும் விளக்கம் கொடுத்து உள்ளது.


சிறுபான்மை மக்கள் இதை எல்லாம் எண்ணி பார்க்க வேண்டும். அதிமுக ஆட்சியில் சிறுபான்மை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்களா.


ஒரு நபர் கூட பாதிக்கப்பட மாட்டார்கள் என்று உறுதி கூறுகிறேன். இலங்கை தமிழர்களுக்கு குடி உரிமை வாங்கித் தருவதாக கூறும் திமுக ஆட்சியில் இருந்தவரை என்ன செய்தது?


சிறுபான்மை மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும். திமுக அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்கிறது.


தமிழகத்தில் கணக்கெடுப்பு நடக்கவில்லை. சிறுபான்மை மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.


உங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் அது எங்கள் பிரச்சினையாக கருதி தீர்ப்போம். " என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள். 


செய்திகள்- சேலம் மாவட்ட செய்தியாளர்...


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image