பஞ்சமி நிலம் விவகாரம் மீண்டும்  தாழ்த்தப்பட்டோர் ஆணையம்  உயர்நீதிமன்றத்தில் மனு..

பஞ்சமி நிலம் விவகாரம் மீண்டும்  தாழ்த்தப்பட்டோர் ஆணையம்  உயர்நீதிமன்றத்தில் மனு..


திமுகவின்   முரசொலிஅறக்கட்டளைக்கு எதிராக பெறப்பட்ட புகாரை விசாரிக்க தங்களுக்கு அனைத்து அதிகாரங்களும் இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் (The National Commission for Scheduled Castes-NCSC) தெரிவித்துள்ளது.


பிரிட்டிஷ் காலக்கட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிலம் பஞ்சமி நிலம் என்ற விவகாரம் சிறிது காலமாக சர்ச்சையாகி வருகிறது.


இது தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் எல்.முருகன் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்னிலையில் அளித்த எதிர் மனுவில் தங்கள் விசாரணை குறிப்பாக அது பஞ்சமி நிலமா அல்லது இல்லையா என்பதைப் பற்றியே என்று தெரிவித்துள்ளார்.


“மனுதாரர் குற்றமற்றவர் என்றால், சர்ச்சைக்குரிய நிலம் பஞ்சமி நிலம் இல்லை என்றால் அவர்கள் உலகம் அறிய அதனை உரிய ஆவணங்களுடன் அறிவிக்கலாம். ஆனால் மனுதாரர் தேவையற்ற புகார்களை எதிர்மனுதாரர் மீது சுமத்துகிறார்” என்று அவர் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


தாழ்த்தப்பட்டோருக்கான பஞ்சமி நிலம் ‘மோசடி செய்து’ பறிக்கப்பட்டதா என்பதை அறிவது ஆணையத்தின் கடமையாகும் என தனது மனுவில் கூறப்பட்டுள்ளது...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.


தமிழ் சுடர் ஆன்லைனில்


செய்தி- கோவி. சரவணன்..


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image