ஆம்பூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்து மான் பொதுமக்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைப்பு.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் கிராமத்தில் இன்று அதிகாலை தண்ணீர் தேடி மூன்று மான்கள் ஊருக்குள் சுற்றிதிரிந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி தெரு நாய்கள் அதிக நேர குரைத்தபடி துரத்தி உள்ளது. இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் மூன்று மான்களை காட்டு பகுதிகளுக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது இரண்டு மான்கள் மட்டும் காட்டுப்பகுதியிற்கு சென்று நிலையில் 4 வயது மதிக்கத்தக்க ஓர் ஆண் மான் மட்டும் அங்கேயே இருந்துள்ளது. அதனை பிடித்து அங்குள்ள கோவிலில் கட்டி வைத்தனர். அப்போது அவ்வழியாக சென்ற பள்ளி, கல்லுரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அழகிய காட்டு மானை கண்டு ரசித்தனர். பின்னர் இதுகுறித்து ஆம்பூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் அந்த மானை மீட்டு அருகில் உள்ள விண்ணமங்கலம் காப்புக்காட்டில் பாதுகாப்பாக விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.
செய்திகள்- கோவி. சரவணன்- அரவிந்தன்.