ஆம்பூர் அருகே கல்குவாரி அமைக்க அனுமதி வழக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சோலூர் பஞ்சாயத்து உட்பட்ட பகுதிகளில் விவசாயம் செய்ய பயனில்லாமல் உள்ள நிலங்களில் கல்குவாரி மற்றும் செயற்கை மணல் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அமைத்திட மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க கோரி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் மனு அளித்தனர்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பொதுமக்கள் கூறுகையில்..
திருப்பத்தூர் மாவட்டம் தற்போது புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் ஆம்பூர் வட்டம் சோலூர் பகுதியில் உள்ள பாலாற்றில் தினம்தோறும் மணல் கொள்ளை நடைப்பெற்று வருகிறது. அதை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகள் எடுத்தாலும் மணல் திருட்டை ஒழிக்க முடியவில்லை. இதனால் எங்கள் பகுதியில் விவசாயம் செய்ய பயனில்லாமல் உள்ள நிலங்களில் அரசு அனுமதியுடன் கல்குவாரி மற்றும் செயற்கை மணல் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அமைத்திட வேண்டும். இதனால் எங்கள் பகுதியில் வேலை வாய்ப்பு உருவாக்கும், குறிப்பாக பாலாற்றில் திருடப்படும் மணலை தடுக்க இது மாற்று ஏற்பாடாக அமையும். கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற இது வழிவகுக்கும் என கூறினார். இந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் சிவனருள் உங்கள் மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அதனையடுத்து வாணியம்பாடியில் உள்ள மாவட்ட சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்திலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர். எங்கள் பகுதிக்கு இது வேண்டாம் அது வேண்டாம் என்று போராட்டம் செய்யும் மக்கள் மத்தியில் கல்குவாரி மற்றும் செயற்கை மணல் தயாரிக்கும் தொழிற்சாலைகள் வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..
tamilsudrr.page
செய்தி- கோவி.சரவணன்..