வருமான வரித்துறை தொடர்  சோதனை அச்சத்தில் நடிகர் விஜய்..

வருமான வரித்துறை தொடர்  சோதனை அச்சத்தில் நடிகர் விஜய்..


சென்னை:


2வது நாளாக விசாரணை தொடர்வதால் விஜய்யும், அவரது குடும்பத்தினரும் ஒட்டு மொத்தமாக அதிர்ந்து போயிருக்கின்றனர். சிக்கிய ஆவணங்களுக்கு பதில் சொல்லி தெரியாமல் விஜய் தடுமாறுவதாக தகவல்கள் கசிந்துள்ளன.


பிகில் பட விவகாரம் தொடர்பாக ஏஜிஎஸ் சினிமாசுக்கு சொந்தமான 20 இடங்கள், சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் வீட்டில் நேற்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.


யாரும் எதிர்பார்க்காத சோதனை இது. கணக்கில் வராத ரூ. 24 கோடி ரொக்கம், தங்க நகைகளை பறிமுதல் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து மாஸ்டர் படப்பிடிப்பில் நெய்வேலியில் இருந்த விஜய்யை வருமான வரித்துறையினர் சென்னைக்கு அழைத்து வந்தனர்.


படப்பிடிப்பு ஏரியாவில் இருந்து அப்படியே காரில் அண்டக்குடுத்து இரவு 9 மணிக்கு விஜய்யுடன் சென்னை வந்தனர். நேராக சென்னை சாலிகிராமம், நீலாங்கரை மற்றும் பனையூரில் உள்ள விஜய்யின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.


அதில் பனையூர் வீட்டில் விடிய, விடிய சோதனை நடந்துள்ளது. விஜய் வீட்டில் 8 அதிகாரிகள் தொடர் சோதனையில் குதித்தனர். சோதனையின் போது பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.


அவற்றை பற்றி தொடக்க விசாரணையில் விஜய் தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்றும் அவரது குடும்பத்தினர் செமத்தியாக அதிர்ந்து போயிருப்பதாகவும் தகவல் வருகின்றன. எதிர்பாராத இந்த ஐடி ரெய்டால் விஜய் கண்கலங்கிவிட்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.


இந்நிலையில் விஜய்யின் வீட்டிற்கு முன்பு துப்பாக்கிய ஏந்திய போலீசார் 7 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் வைத்தே விஜய்யிடம் 5 மணிநேரம் விசாரணை நடத்தி இருக்கின்றனர்.


சோதனையால் மாஸ்டர் படப்பிடிப்பு நேற்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. படப்பிடிப்பை இன்று தொடர திட்டமிட்டார்கள். ஆனால் விஜய் வீட்டில் இன்னும் சோதனை நடந்து வருவதால் படப்பிடிப்பு நடக்காது என்று தெரிகிறது. 330 கோடி ரூபாய் பிகில் வருமானம் என்ற அறிவிப்பே விஜய்க்கு வேட்டு வைத்துவிட்டதாக அவரது நலன் விரும்பிகள் கவலை தெரிவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள். 


செய்தி- சினிமா சுடர்...


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image