விருத்தாசலம் அருகே விளையாட்டு திடல் பணி முடக்கம் போலிசார் விசாரணை.

விருத்தாசலம் அருகே விளையாட்டு திடல் பணி முடக்கம் போலிசார் விசாரணை.


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த சித்தேரிக்குப்பம் ஊராட்சி கவணை கிராமத்தில் 2019- 2020 ஆம் ஆண்டு எம்.ஜி.என்.ஆர்.ஜி திட்டத்தில் ரூபாய் 60ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு கிராவல், மணல், செங்கல்  அடித்து சுற்றுச்சுவர் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இன்று காலை மீண்டும் விளையாட்டு மைதான  பணியை தொடர வந்தபோது கவணை கிராமத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன்  தபெ.துரைசாமி என்பவர் இரவோடு இரவாக சுற்றுச் சுவர்களை சேதப்படுத்தி தெரிகிறது மேற்படி சித்தேரிகுப்பம் ஊராட்சி மன்ற தலைவராக தலித் இனத்தைச் சேர்ந்த ராஜவேல் என்பவர் பதவி வகித்து வருகிறார். இதனை ஏற்றுக்கொள்ள முடியாத மாற்று சமூகத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் இரவோடு இரவாக சேதப்படுத்தியதாக ஊராட்சி மன்றத்தலைவர் ராஜவேல் ஊராட்சி செயலாளர் செந்தில்  மங்கலம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் அடிப்படையில் மங்கலம்பேட்டை காவல்துறையினர் துரைசாமி மகன் ராதாகிருஷ்ணன் என்பவரை அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  


 செய்தி : விருத்தாசலம்  R.காமராஜ்


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image