ஆம்பூர் அருகே வனப்பகுதியில் கிராமத்துக்குள் நுழைந்து மான் ஒரு மணி நேரம் உயிருக்கு போராடி பலி .
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் உமராபாத் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களுக்கு கடந்த ஒரு வார காலமாக சிறுத்தை நடமாட்டம் உள்ளதாகவும் அங்கு உள்ள வன விலங்குகளை வேட்டையாடி வருவதாகவும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் இன்று வனப்பகுதியை ஒட்டி உள்ள விவசாய நிலத்தில் சிறுத்தை ஒன்று அங்கு இருந்த மான் ஒன்றை வேட்டையாடி உள்ளது பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடி அருகிலுள்ள கிராமத்திற்குள் நுழைந்துள்ளது ஆம்பூர் பேர்ணாம்பட்டு சாலையோரம் உள்ள பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் உயிருக்கு போராடி வந்த நிலையில் திடீரென உயிரிழந்தது மானை மீட்டு ஆம்பூர் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி- கோவி.சரவணன்..