ராமதாஸ் மற்றும் ரஜினி மீது விமர்சனம் கடைசியில் பொதுமக்களிடம் பல்பு வாங்கிய திமுக எம்பி..
சென்னையில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் இஸ்லாமியர் தாக்கப்பட்டதாகக்கூறி தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் தீடீரென தனது டிவிட்டர் கணக்கில் பதிவிட்டுயிருந்த சர்ச்சை கூறிய தவறான படங்களை நீக்கி மன்னிப்பு கேட்டுள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் சென்னையில் போராட்டத்தை நடந்த முயன்ற போது இது பெரிய பிரச்சனையாக வெடித்து. குறிப்பாக தடையை மீறி போராட்டம் மற்றும் கல்வீச்சு சம்பவம் நடந்ததால் போராட்டக்காரர்களை கலைந்து போகச்சொல்லி பலமுறை சொல்லியும் கேட்காத போராட்டக்காரர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது. இதில் காவல்துறை தரப்பிலும் மற்றும் போராட்டக்காரர்கள் தரப்பில் சிலரும் காயமடைந்தனர். இந்த சம்பவம் தற்பொழுது தமிழகத்தில் பெரும் பிரச்சனையாக வெடித்து பல இடங்களில் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நிலைமை இப்படி இருக்க. இந்த போராட்டத்துடன் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் மற்றும் நடிகர் ரஜினிகாந்தை தொடர்புபடுத்தி அவர்களை வம்பிழுக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் திமுகவினர் தங்கள் கருத்துகளையும், மீம்ஸ்களையும் பதிவிட்டு டிரெண்டிங் செய்து வருகின்றனர். நிலைமை இப்படி இருக்க தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் ஒருபடி மேலோ போய், பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் ரஜினியை தாறுமாறாக விமர்சனம் செய்தார். இதில் இஸ்லாமியர்களுக்கு ஒரு ஆபத்து என்றால் முதல் ஆளாக நான் நிற்பேன் என்று சொன்னது நீங்க தானா. என்றும் எங்க இப்ப அந்த இரண்டு பேரும் ஆளை காணோம்.
என்றும் ஆர்வக்கோளாறில் தனது ட்விட்டர் பக்கத்தில் இஸ்லாமியர்கள் சிலர் இரத்தக்காயங்களுடன் இருப்பது போன்ற படங்களையும் பதிவிட்டு, அதிமுக அரசும் மற்றும் அதன் கூட்டணி கட்சியான பாமக மற்றும் அதன் நிறுவனர் ராமதாஸ் இப்ப என்ன சொல்லப்போகிறார் என கேள்வி எழுப்பியிருந்தார். ஆனால், அது நேற்றைய போராட்டத்தின் போது காயமடைந்தவர்களின் படங்கள் அல்ல என காவல்துறை மூலம் தெரிய வந்தது. அந்த படம் திருவாரூர் மாவட்டத்தில் நடந்த சாலைவிபத்தில் ரத்தக்காயத்துடன் கிடக்கும் இளைஞர் ஒருவர் படம் என்று தெரிய வந்தது. இதையும், செந்தில்குமாரின் பதிவுக்கான விமர்சனத்தில் பலரும் சுட்டிக் காட்டியிருந்தனர். ஆனால், தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் அதையெல்லாம் கண்டு கொண்டதாக தெரியவில்லை. இந்நிலையில், தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த காயமடைந்த சிலரின் போட்டோக்களை திடீரென செந்தில்குமார் நீக்கிவிட்டார். அத்துடன், அந்த புகைப்படம் சி.ஏ.ஏ.க்கு எதிரான போராட்டத்தில் பாதிக்கப்பவர்களது அல்ல என்றும் சாலை விபத்தில் காயமடைந்தவர்களின் படம் என்று சமூக வலைத்தளங்களில் சிலர் சுட்டிக்காட்டினர். அதையடுத்து இதற்காக நான் பகிரங்கமாக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இனி அதிகாரபூர்வமற்ற புகைப்படங்களை பதிவிடும் போது இரு மடங்கு கவனமாக இருப்பேன் என்று தனது பதிவில் கூறியுள்ளார். ஆனால் பாமகவினர் மற்றும் ரஜினி ரசிகர்கள் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினரை பல்வேறு மீம்ஸ்கள் திமுக எம்பி நிலைகுலைந்து செய்து வருவதும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பொய்யான தகவலை வெளியிட்டு பொதுமக்களிடம் 'பல்பு' வாங்கிய சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.
hptt. tamilsudarr.page
செய்தி- கோவி.சரவணன்...