இரவில் தடியடி. காலையில் முதல்வருடன் சந்திப்பு சென்னை காவல் துறை அதிரடி...
சென்னை:
பொதுமக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று காவல் துறை ஆணையர் ஏகே விஸ்வநாதன் வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.
குடியுரிமை சட்டத்தை கண்டித்து சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் நேற்று மாலை போராட்டம் நடத்தினர். அந்த போராட்டம் வன்முறையில் முடிந்தது.
போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இந்த நடவடிக்கைக்கு பலரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். தடியடியில் ஒரு முதியர் இறந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அது பொய் என்று சென்னை காவல்துறை விளக்கவிட்டது.
இந் நிலையில், சென்னை கீரின்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில், எடப்பாடி பழனிசாமியை காவல் ஆணையர் விஸ்வநாதன் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். தடியடி போராட்டம் குறித்து அவர் விளக்கம் அளித்ததாக தெரிகிறது.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது: வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தை தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும்.
பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு காண்பது எப்படி என்பதை சிந்திக்க வேண்டும். தலைவர்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படாமல் அமைதி காக்க சென்னை காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.
செய்திகள்- கோவி. சரவணன்..