மாஜி காதலியிடம் நெருக்கமாக இருந்த போட்டோவை காட்டி மீண்டும் உல்லாசத்திற்கு அழைத்த காதலன் கைது.

மாஜி காதலியிடம் நெருக்கமாக இருந்த போட்டோவை காட்டி மீண்டும் உல்லாசத்திற்கு அழைத்த காதலன் கைது!!


நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகேயுள்ள விவசாயம் சார்ந்த கிராமம் பாலையூர். அங்கு வசிக்கும் ராமனின் மகன் வினோத். 32 வயதான இவர் அதேபகுதியை சேர்ந்த ஒருபெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி நெருக்கமாக பழகியுள்ளான். தான் நெருக்கமாக இருப்பதை போட்டோ மற்றும் வீடியோ என மறைமுகமாக எடுத்து வைத்திருந்திருக்கிறான் வினோத்.


பிறகு அந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியாது என வலுக்கட்டாயமாக மறுத்துவிட்டதால் அந்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். இப்படி ஒரு ஆண்டு கடந்துவிட்ட நிலையில் அந்தப்பெண்ணை சில தினங்களுக்கு முன்பு வழியில் மீண்டும் சந்தித்த வினோத், அவர் மீது மீண்டும் ஆசைப்பட்டு அவரை உல்லாசத்துக்கு அழைத்துள்ளான். அந்த பெண் மறுத்ததால் போட்டோவை காட்டி மிரட்டி கட்டாயப்படுத்தியிருக்கிறான்.


அதிர்ச்சியில் உறைந்துபோன அந்த பெண் பாலையூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க  இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து வினோத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள். 


செய்திகள்- சிறப்பு செய்தியாளர்...


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image