தேசிய செய்தி..
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுகின்ற பணியானது, விரைவில் துவங்க இருப்பதாகவும் உத்தரப் பிரதேச மாநிலத்தின், துணை முதல் அமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா தெரிவித்து இருக்கின்றார்.
பா.ஜ.க தேசியத் தலைவர்களில் ஒருவரும், உத்தரப் பிரதேச மாநிலத்தின் துணை முதல்வருமான கேசவ் பிரசாத் மவுரியா நேற்று ராமேஸ்வரத்தின், ராமநாத சுவாமி திருக்கோவிலுக்கு, வந்திருந்தார். அவருக்கு திருக்கோவில் அதிகாரிகள் வரவேற்பு அளித்தார்கள். திருக்கோவிலில், சுவாமி மற்றும் அம்பாள் சன்னதியில் ஸ்வாமி தரிசனம் செய்ததற்கு பின்பாக, திருக்கோவிலின் சுற்று பிரகாரங்களை பார்வையிட்டார். அதன் பின்னர் ராமேஸ்வரத்தின், பள்ளி வாசல் தெருவில் இருக்கின்ற முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மூத்த சகோதரரான, முத்து மீரா மரைக்காயரை சந்தித்து நலம் விசாரித்தார்.
அதன் பிறகு,உத்தரப் பிரதேச மாநிலத்தின், துணை முதல் அமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா செய்தியாளர்களிடம் பேசிய போது, டெல்லி சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பை நிர்வகிக்கும் என்றும், இந்திய குடியுரிமைச் சட்டத்தை எதிர்கின்றவர்களின் எண்ணிக்கையானது, மிகவும் குறைவு என்றும், குடியுரிமை சட்டம் பற்றி, மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், 2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் பா.ஜ.க மக்களின் பெரும் ஆதரவு பெற்று ஆட்சியைப் பிடித்தது போல, 2024-ம் ஆண்டிலும் மக்களின் பெரும் ஆதரவு பெற்று ஆட்சியை பிடிக்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுகின்ற பணியானது விரைவில் தொடங்க இருப்பதாகவும், இன்னும் 35 நாட்களில் அதற்கான அறக்கட்டளை அமைக்கின்ற பணியானது துவங்க இருப்பதாகவும், உத்தரப் பிரதேச மாநிலத்தின், துணை முதல் அமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா, தெரிவித்தார்
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.
Website.tamilsudarr.page
செய்தி- கோவி. சரவணன்...